குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு அமர்வுகளாக நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்ட அமர்வு பிப்.13 வரை. 2ஆம் அமர்வு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்.2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் உரை, பொருளாதார நிலை குறித்த விவாதங்கள் மற்றும் பட்ஜெட் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுகின்றன.
இரண்டாம் அமர்வில் பட்ஜெட் மீதான விரிவான விவாதங்கள், நிதி மசோதாக்கள் மற்றும் பிற சட்ட மசோதாக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன.
