தியாகிகள் வாரிசுகள்: ஆட்சியர் கவுரவிப்பு
இராமநாதபுரம், ஜன.27- இராமநாதபுரத்தில் திங்களன்று 77 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை ஆயு தப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 79 காவல்துறை அலுவலர்கள் மற்றும் சிறப்பாக பணி யாற்றிய 331 அரசு அலுவலர்கள் என மொத்தம் 410 அலு வலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில், காவல்துறை துணைத் தலைவர் இராம நாதபுரம் (சரகம்) தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் சக்கரகோட்டை பகுதியில் செயல் பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பனிரெண்டாம் அணியைச் சேர்ந்த காவலர்கள் தேசிய கொடியேற்றினர். கமாண்டன்ட் முருகேசன் ஏற்றி வைத்தார். துணை ஆணை யர் ஜெயந்தி, உதவி ஆணையர் ஈஸ்வர பிரசாத், ஆய்வா ளர் சலீம் உள்ளிட்டோர் சிறப்பாக பணியாற்றிய காவ லர்களுக்கு பதக்கம் வழங்கினர்.
