இராமநாதபுரத்தில் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம், ஜன.27- இராமநாதபுரம் மாவட் டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பாக 70 வயது பூர்த்தியான அனை த்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும் உள் ளிட்ட 4 அம்ச கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி வட்ட தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக இராமநாதபுரத்தில் வட்டா ரத் தலைவர் சி.சுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் எம்.அம்பேத்கர் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் கே. கருப்பையா துவக்க உரை யாற்றினார். டி.என்.ஆர்.டி. பி.ஏ மாவட்டத் தலைவர் முரு கேசன், டிஎஸ்ஏயு மாவட்ட துணை தலைவர் ஆறு முகம், சிஐடியு போக்குவரத்து தலைவர் எம்.அய்யாதுரை ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாவட்ட இணை செய லாளர் எம்.கருணாநிதி நிறை வுரையாற்றினார். வட்ட பொருளாளர் வி.ராஜு நன்றி கூறினார். முதுகுளத்தூரில் வட்டா ரத் துணை தலைவர் பி.ராம சாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் எம்.ஹச்.காஜா நஜிமுதீன் வர வேற்றார். மாவட்டச் செயலா ளர் பி.எஸ்.விஜயராகவன் துவக்க உரையாற்றினார். எஸ்.துரைப்பாண்டியன், என்.ராமகிருஷ்ணன், என்.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணை தலைவர் கே.சிவனு பூவன் நிறைவுரையாற்றினார். பரமக்குடியில் வட்டாரத் தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். வட்ட இணைச் செயலாளர் எம்.எஸ்.பூமிநாதன் வர வேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பிச்சை, துவக்க உரையாற்றினார். டி.என்.ஜி.இ.ஏ மாவட்டச் செயலாளர் அப்துல் நஜி முதீன், வட்டச் செயலாளர் கே.தன்வந்திரி, எம்.மாரி முத்து, டி.என்.ஜி.பி.ஏ வட்ட துணைத் தலைவர் வி.இரு ளப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் ஜி.கதிரேசன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் என்.முகமது எக்கியாதின் நன்றி கூறினார். கீழக்கரையில் வட்டச் தலைவர் பி.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சி.ராஜேந்திரன் துவக்க உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சிதம்பரம், கடலாடி வட்டக் கிளை செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாவட்ட பொருளாளர் எஸ்.முருகேசன் நிறைவு ரையாற்றினார். வட்டச் செய லாளர் ஏ.ஜெயராஜ் நன்றி கூறினார். இராமேஸ்வரத்தில் வட்ட தலைவர் கே.இரு ளாண்டி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஏ. ரத்தினவேல், வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எஸ். முருகேசன் துவக்க உரை யாற்றினார். ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவ ட்ட பொருளாளர் த.ராமச் சந்திரபாபு வாழ்த்துரை யாற்றினார். மாவட்ட தலை வர் ஜி.கிருஷ்ணன் நிறைவு உரையாற்றினார். வட்ட பொருளாளர் கே.சந்திரன் நன்றி கூறினார்.
