காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி, ஜன.27- காரைக்குடி மாநகரத்தில் அனுமதி இன்றி செயலி மூலம் இயங்கும் வாக னங்களை போக்குவரத்து துறை ரத்து செய்ய வேண்டும். விதி மீறும் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஆட்டோ விற்கான செயலியை அரசே உருவாக்கி மீட்டர் கட்டணத்தை மாற்றி அறிவிப்பு செய்ய வேண்டும். அனுமதியை மீறி கூடுதல் வழிதடங்களில் இயக்கும் மினி பேருந்து கள் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி காரைக்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் (சிஐடியு) சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி கண்ணதாசன் மணி மண்ட பம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாநகர் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் வெங்கிடு முன்னிலை வகித்தார். ஆட்டோ சங்க மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலா ளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலை வர் கருப்பு, சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தெய்வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொரு ளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
