மக்காச் சோளம் குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிடுக! விருதுநகரில் விவசாயிகள் போராட்டம்
விருதுநகர், ஜன.27- மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஏக்க ருக்கு ரூ.40ஆயிரம், மானாவாரி விவசாயி களுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் அ.விஜயமுரு கன் தலைமையேற்றார். மாவட்ட பொருளா ளர் எஸ்.மனோஜ்குமார் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ் பேசினார். மாவட் டச் செயலாளர் வி.முருகன் கண்டன உரை யாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ரெங்க நாதன், கே.ஏ.பெருமாள்ராஜ், ஆர்.பெரு மாள், மங்கையற்கரசி, சேதுராமசாமி, சௌந்திரபாண்டியன் உட்பட பலர் பங் கேற்றனர்.
