அரிமா பள்ளியில் கொடியேற்றம்
திருவில்லிபுத்தூர், ஜன.27- திருவில்லிபுத்தூரில் உள்ள அரிமா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். விழா வில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் ஆகியோர் விழாவிற்கு முன் னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கத் தலைவர் குணசேகரன், பள்ளி தாளா ளர் வெங்கடாஜலபதி மற்றும் முதல்வர் சுந்தர மகா லிங்கம் குடியரசு தின சிறப்பு உரை நிகழ்த்தினர்.
