விருதுநகரில் குடியரசு தினக் கொண்டாட்டம் ‘இந்தியாவும், மதச்சார்பின்மையும்’ சிறப்புக் கருத்தரங்கம்
விருதுநகர், ஜன.27- விருதுநகரில் குடியரசு தினத்தன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் “இந்தியாவும், மதச்சார்பின்மையும்“ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.நாகூர் மீரான் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.மரியடேவிட் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ஜே.சீனிவாசன் உறுதிமொழியை வாசித்தார். கருத்தரங்கை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் எம்.தாமஸ்சேவியர் பேசினார். முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், அருட்தந்தை அ.அந்தோணிபாக்கியம், கல்வியாளர் எஸ்.எம்.ஷேக்மகபூப், மாநில துணைத் தலைவர் எம்.ராமகிருஷ்ணன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.பாக்கியராஜ் நன்றி கூறினார். எம்.ராமகிருஷ்ணன் கூறுகையில், தற் போது நீதிமன்றங்கள் அரசின் கைப்பாவை யாக மாறி விட்டன என திருப்பரங்குன்றம் தீபம் ஏற்று வழக்கு பற்றி தெரிவித்தார். மேலும், நீதிபதிகள், அரசியல் சாசனத்தில் தார்மீக உரிமைகளை நிலைநாட்டுபவர் களாக இருக்க வேண்டும். ஆனால், நம் பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கு கின்றனர் எனக் கூறிய அவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டு வதற்கு உச்சநீதிமன்ற நீதிபதியால் வழங்கப் பட்ட தீர்ப்பை சுட்டிக் காட்டினார். பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக பறிபோனது. இதனால், மீண்டும் நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி வெற்றி பெற் றுள்ளது என்று கூறிய அவர், தேர்தல் ஆணை யம் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறது என்றார். பாஜக ஆளும் மாநிலத்தில் குடியரசு தினத்தன்று மாமிசம் விற்கக் கூடாது என தடை விதித்துள் ளனர். 18 சதவிகிதம் உள்ள சிறுபான்மையின ருக்கு ஒரு பாதிப்பு என்றால் பெரும்பான்மை யாக உள்ள 82 சதவிகிதம் பேரும் குரல் கொடுக்க வேண்டும். அதற்காக சிறுபான்மை மக்கள் நலக்குழு தொடர்ந்து பாடுபடும் என் றார். ஷேக் மகபூப் கூறுகையில், குடியரசு தினத்தன்று பள்ளிவாசல்களில் தேசியக் கொடியை ஏற்றினோம். நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றார். அங்கு அவரை தலைவராக அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அந்நகரம் வளர்ச்சி யடையவும் முதன் முதலில் மதச்சார்பின் மைக்கு எடுத்துக்காட்டாகவும் நிர்வாகக்குழு வை அமைத்தார். அதில் யூதர்கள், கிறிஸ்த வர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் இந்தியா எல்லோருக்கு மான தேசமாக இருந்தது. தற்போது அதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத் தின் முகவுரையில் மதச்சார்பின்மை என எழு தப்பட்டுள்ளது. அனைவரும் சமமாக பாவிக் கப்பட வேண்டும் என உள்ளது என்றார். அருட்தந்தை அந்தோணி பாக்கியம் கூறு கையில், இங்குள்ள மனிதர்கள் அனைவ ருமே ஒரே ஊற்றில் இருந்து தோன்றியவர்கள் தான். உலக வரலாற்றில் ஒன்று ஒடுக்கு பவர்கள், மற்றொன்று ஒடுக்கப்படுபவர்கள் என இரண்டு தான் உள்ளது என மாமேதை காரல்மார்க்ஸ் கூறியுள்ளார். அனைவரும் புத்தத்துறவி ராகுலசாங்கிருத்தியான் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்ற நூலைப் படிக்க வேண்டும். தற்போது கட வுள் மீதான நம்பிக்கையின் பெயரால் மனிதப் படுகொலைகள் நடக்கின்றன. ஒன்றிய அர சில் உள்ளவர்கள் சாமி கும்பிடுகின்றனர். ஆனால், பிளவுவாத, பிரிவினைவாத கருத் துக்களை கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் ஏன்? இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் மாறினர். இம்மதங்கள் அன்பையும், சமத்து வத்தையும் வலியறுத்தியது என்ற காரணத் தால் தான். இந்தியாவில் புத்த மதம் தோன்றி யது. புத்த சங்கத்தில் சேர விரும்புவோர் தங்க ளது நிலங்களை எழுதித் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிலத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்து அதில் கிடைக்கும் உணவு, தானியங்களை அனை வரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. எனவே, அப்போது நாட்டை ஆண்ட அரசர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கட வுள் மறுப்பாளர்கள் சமூக நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றை கொண்டு வந்த னர். சிறுபான்மை மக்கள் நலக்குழு போர் வாளாக செயல்பட வேண்டும் என தெரி வித்தார். பாரதி கிருஷ்ணகுமார் கூறுகையில், இயற்கை சீற்றங்கள் ஏழை, பணக்காரன் என்ற பேதம் பார்ப்பதில்லை. இயற்கை சீற் றத்தால் மாண்டவர்களை விட மதச் சண்டை யால் கொல்லப்பட்டவர்களே அதிகம். எல்லாவற்றையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என நினைப்பவர்கள் தான், பிரித்தாளுதலை, பிரிவினையை உரு வாக்கி வருகின்றனர். 2004 இல் சுனாமி பேர லையால் இறந்தோரின் உடலை அடக்கம் செய்ய பள்ளி வாசல்கள், தேவாலயங்க ளுக்கு சொந்தமான இடங்களில் புதைக்கப் பட்டன. ஏராளமான உடல்கள் மத அடை யாளங்களை பார்க்காமல், பொக்லைன் உத வியுடன் ஒரே குழியில் அடக்கம் செய்யப் பட்டன. யாரும் மதத்தை தேர்வுசெய்து பிறப்ப தில்லை. பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு தரக்கூடாது. நாம் உண்ணும் உணவில் மண் அள்ளிப் போடும் கூட்டம் தற்போது வந்துள்ளது. இந்தக் கூட்டம், குடியரசு தினத் திற்கு விடுமுறை விடலாமா? எனக்கூட யோசிக்கும். ஒருவன் மனிதானாக, மாண்பு டைய மனிதனாக வாழ வேண்டும். காலம் காலமாக பகைமை உள்ள சமூகத்தில் அமைதி இருக்காது. அமைதி இல்லை யெனில் வளர்ச்சி இருக்காது. வளர்ச்சி இல்லையெனில் வாணிபம் செழிக்காது.டாக்டர் அம்பேத்கர், பகல் இரவு பார்க்காமல் உழைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளார். அதில், அனைவருக்கும் சம உரிமையை வழங்கி யுள்ளார் என தெரிவித்தார். மேலும் இதில், மாவட்ட துணைச் செயலா ளர் ஐ.ஜெயா, எம்.முகம்மது எகியா, ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் பஷீர்அகமது, சுந்தரம், ராபர்ட் கென்னடி, லியாகத் அலி, கே.ஆரோக்கியராஜ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
