மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராமதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அஜித் பவார் லியர்ஜெட்–45 (VT-SSK) என்ற சிரிய ரக விமானத்தில் சென்றுகொண்டிருந்தார்.
விமானமானது பாராமதி விமான நிலையத்தில் காலை 8.45க்கு தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விமானம் சுக்குநூறாக நொறுங்கி முழுமையாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில், துணை முதல்வர் அஜித் பவார்,இரு விமானிகள், ஒரு விமான பணிப்பெண், ஒரு பாதுகாப்பு ஊழியர் உட்பட அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அஜித் பவாரின் இறுதிச்சடங்குகள் பாராமதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
