states

img

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம்  தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

புதுதில்லி இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்த ஒப்பந்தம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25 சதவிகிதம்  மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய எரிசக்தி வார (Indian Energy Week) நிகழ்வில் காணொலி வாயிலாக உரை யாற்றிய அவர், “இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் (Mother of all deals) என்று மக்கள் மத்தியிலே பேசப்படுவ தாகவும்  இவ்வொப்பந்தம்  140 கோடி இந்தியர்க ளுக்கும், கோடிக்கணக்கான ஐரோப்பியர்க ளுக்கும் பெரும் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.  இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 2026 ஜனவரி 27 அன்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான தொடர் பேச்சுவார்த்தை கள் முடிவடைந்து, இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தன. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கையெழுத்தாகி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே தடையற்ற வர்த்தகத்தைத் துவங்கு வது தொடர்பாக 2007 இலிலேயே பேச்சு வார்த்தைகள் துவங்கப்பட்டது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி யாகியுள்ளது. இருதரப்பு வர்த்தகம் ஏற்கெனவே 136 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ள நிலை யில், இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய இருதரப்பு ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும் என்று  கூறப்படுகிறது.  வர்த்தக ஒப்பந்தத்தின்  சில அம்சங்கள்: இந்தியாவின் ஏற்றுமதியில் 99 சதவிகி தத்துக்கும் அதிகமான பொருட்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்ல முன்னு ரிமை நுழைவுச் சலுகையைப் பெறும். ஜவுளி, தோல் பொருட்கள், கடல்சார் பொ ருட்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற உழைப்பு சார்ந்த துறைகளில் 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிக்கு முன்னுரிமை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளிலேயே, சுமார் 33 பில்லியன் டாலர் மதிப்பி லான ஏற்றுமதிப் பொருட்களுக்கு 10 சதவிகி தம்  வரை இருந்த வரிகள் பூஜ்ஜியமாக குறைக் கப்படும். ஆட்டோமொபைல் துறையில் ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வரிச்  சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக பெரும் கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் விலை  உயர்ந்த கார்கள் விலை குறையும்,ஐரோப்பிய  ஒயின்களுக்கான வரி 150 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக்  குறையும். 2.5 யூரோக்களுக்கும் குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு எந்த வரிச் சலுகைக ளும் வழங்கப்படாது.  இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய பாரம் பரிய மருத்துவ வல்லுநர்கள் (ஆயுர்வேதம் போன்றவை), ஐரோப்பிய நாடுகளில் அந்தப் பெயரிலேயே பணிபுரிய அனுமதி கிடைத்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் 22 ஆவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தக் கூட்டா ளியாக ஐரோப்பிய ஒன்றியம் இணைந் துள்ளது.