states

img

ஜம்மு-காஷ்மீருக்கு விமானங்கள் ரத்து

ஜம்மு-காஷ்மீருக்கு விமானங்கள் ரத்து

ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீரில் குளிர் காலம் உச்சத்தை நெருங்கியுள்ளதால் தலைநகரமான ஸ்ரீநகரில் பனிப்பொழிவு அதிகரித்துள் ளது. இதனால் சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டுள்ள ஸ்ரீநகரில் சாலை0, ரயில், விமானப் போக்குவரத்து வசதிகள் கடும் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில், கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான  நிலையத்தில் 50 விமானங்க ளின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது மோசமான வானிலை என்ற அறிவிப்பின் மூலம் விமான நிலையத்தில் இருந்து புறப் பட வேண்டிய 25 விமானங்க ளும், 25 விமானங்களின் வரு கையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் குடியரசு நாள் விடுமுறையைக் கொண்டாடு வதற்கு ஜம்மு-காஷ்மீர் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடுக ளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.