headlines

img

வரவேற்பும்... எதிர்பார்ப்பும்!

வரவேற்பும்... எதிர்பார்ப்பும்!

உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் மற்றும்  வளர்ச்சி என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2025 ஆம்  ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழ கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, மாநிலத்தில் ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியது. அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் இந்த மசோதா, சமூகநீதி, இட ஒதுக்கீடு மற்றும்  ஏழை எளியோரின் கல்விக் கனவு ஆகிய வற்றை பாதிக்கும் என்ற பரவலான கவலை களைத் தோற்றுவித்தது. அரசு மானியம் மற்றும்  பொது நிதியில் உருவாக்கப்பட்ட கல்லூரி களின் கட்டமைப்புகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதுடன், பல்கலைக்கழகங்க ளுக்கான நிலப்பரப்பளவைக் குறைத்திருப்பது, தனியார்மயத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்ற  அச்சம் வலுவாக எழுந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு, மாணவர், ஆசிரியர் சங்கங்கள் (கல்லூரி ஆசிரியர் சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கைக்குழு, இந்திய மாணவர்  சங்கம்), பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,  அரசு ஊழியர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக்கட்சிகள்  என அனைத்துத் தரப்பினரின் கருத்து களுக்கும், சட்டமன்ற விவாதங்களுக்கும் செவி  சாய்த்துள்ளது. இதன் விளைவாக, இந்தச் சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உரிய மறு  ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருப்பது, தமிழ் நாட்டில் மக்கள் விரும்பும் மக்களாட்சி மாண்பு கள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை வலு வாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிதானமான, ஜனநாயகப்பூர்வமான முடிவினை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நமது பாராட்டுகள்.

இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவின் மையக் கருத்தானது, அரசு மானியம் நிறுத்தப்  படுவதன் மூலம், தமிழ்நாட்டின் அசைக்க  முடியாத தூணான 69% இட ஒதுக்கீட்டுக்கு உத்த ரவாதம் இல்லாமல் போகும் என்ற அச்சத்தை விதைத்துள்ளது. கல்விக் கட்டணங்கள் பன்  மடங்கு உயர்ந்து ஏழைகளுக்குக் கல்வி எட்டாக்  கனியாகிவிடுமோ என்ற கவலை நீடிக்கிறது.

எனவே, மறு ஆய்வுக்கு உட்படுத்துவது என்ற  அறிவிப்பு தற்போதைக்கு ஒரு நிம்மதியை அளித்தாலும், தமிழக அரசு இந்தக் கட்டத்தை  ஒரு திருப்புமுனையாகக் கருத வேண்டும். மறு ஆய்வு என்பதைக் கடந்து, “உயர்கல்வியானது சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான கருவியே  அன்றி, வியாபாரப் பண்டம் அல்ல” என்ற அடிப்ப டைக் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகை யில், இந்தச் சட்ட முன்வரைவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பதே காலத்தின் கட்டாய மாக உள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கை  2020-ஐ ஏற்க மறுக்கும் மாநில அரசு, அதன் நோக்கங்களுக்கு வழிவகுக்கும் இத்தகைய முன்  முயற்சியை முழுமையாகத் தவிர்ப்பது அவசி யம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி களை மேலும் வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர் பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும்.