இயற்கை இயல்பைப் பாதுகாப்போம்!
‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்கிறது பவ ணந்தி முனிவர் எழுதிய நன்நூல். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சிய சூத்திரத்தின் அடிப்படை. கால மாற்றத்தோடு இயைந்து வாழக் கற்றுக் கொண்டுள்ளது மனிதகுலம். இயற்கைக் கும், மனித குலத்திற்கும் இடையிலான இயங்கி யல் என்பதும் இயங்கிக் கொண்டே வந்துள்ளது.
இன்றைக்கு பூவுலகின் மிகப் பெரிய அச்சு றுத்தலாக மாறியுள்ளது சுற்றுச்சூழல் மாசுபாடா கும். ஐம்பூதங்கள் என்று சொல்லப்படுகிற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என அனைத்தும் மாறியுள்ளது. நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். ஆனால் காசின்றி கிடைக்காது நீர் என்ற நிலையை முதலாளித்துவம் உருவாக்கி யுள்ளது. ‘இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும்’ என்பார் வள்ளுவர். பிழைக்க வழியில்லை என்று புலம்பும் மக்களுக்கு என்னை வைத்து பிழைக்கக் கூடாதா என்று நிலம் நகைக்கும் என்பது இதன் பொருள்.
ஆனால் நிலவுடைமைச் சமூகம் துவங்கிய காலத்திலிருந்தே நிலத்தை சிலர் சுருட்டி வைத்துக் கொண்டு பெரும் பகுதி மக்களை தவிக்க விடுவது என்பது இன்றைய காலம் வரை தொடர்ந்து வருகிறது. அதுவும் இன்றைக்கே கார்ப்பரேட் முதலாளிகள் நிலவளத்தை தங்க ளது கோரப்பசிக்கு இரையாக்கி வருகின்றனர்.
ஆகாயத்தையும் கூட சமச்சீரற்ற சமூக அமைப்பு விட்டு வைக்கவில்லை. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பூமியின் ஆயுளை குறைத்து வருகிறது. புவி வெப்பமயமாதல் மிகப் பெரிய பிரச்சனை யாக உருவெடுத்துள்ளது.
லட்சக்கணக்கான பறவைகள், விலங்கினங் கள், தாவர வகைகள் காணாமல் போனவர்க ளின் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கிறது. பொதுவுடைமைச் சமூகம் அமைய வேண்டி யது மனிதர்களிடையே இருக்கும் பொருளா தார, சமூக வேறுபாட்டை களைவதற்காக மட்டு மின்றி, முதலாளித்துவம் இயற்கை வளங்க ளைச் சுரண்டுவதை தடுத்து பூமிப்பந்தை பாது காப்பதற்கும் அவசியமாகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் எதுகுறித்தும் கவலையில்லாமல், உலகளாவிய இயற்கை வளச் சூறையாடலில் ஈடுபட்டுள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசும், அடுத்தடுத்து நிறைவேற்றுகிற சட்டங்கள் இயற்கை வளத்தைப் பற்றி கவலை கொள்ளாததாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வ தாகவுமே அமைந்துள்ளது.
பொங்கல் திருநாள் என்பது இயற்கை யைப் போற்றுகிற பெருவிழா ஆகும். இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதன் மூலமே ஒட்டுமொத்த உயிரினங்களும் பாதுகாக்கப் படும். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்து வதில் ஒரு பகுதியையாவது மனித குலம் இயற்கை இயல்பறிவை பாதுகாப்பதில் காட்ட வேண்டும் என்பதே பொங்கல் திருநாள் சொல்லும் சேதியாகும்.