headlines

img

இந்தியா எல்லோருக்குமானது

இந்தியா எல்லோருக்குமானது

இயேசு பிரான் அவதரித்த நாளாக கருதப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தை நம்புபவர்களால் கொண்டா டப்படுகிறது. குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களின் விழாவாக இருந்தாலும் அனைத்துப் பகுதி மக்களும் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்பதும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரம் கிறிஸ்துமஸ் நாளில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. 

தில்லி, ஒடிசா, மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. 

தலைநகர் தில்லியில் சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தில் ஈடுபட்டவர்களை இந்துத்துவா மதவெறிக் கும்பல் அடித்து விரட்டியுள்ளது. ஒடிசாவில் கிறிஸ்தவ தொப்பிகளை விற்ற ஒரு ஏழைக் குடும்பம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும் சத்தீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் கூட நடத்த விடாமல் மிரட்டி ரத்து செய்ய வைத்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடலை பாடிய சிறார்கள் தாக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். 

ஒருபுறத்தில் தலைநகர் தில்லியில் நடை பெற்ற கிறிஸ்துமஸ் ஆராதனை விழாவில் பிர தமர் பங்கேற்று வாழ்த்து தெரிவிக்கிறார். மறு புறத்தில் அவரது பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது அவர்களது புனிதத் திருநாளன்று தாக்குதல் நடத்தி அச்சுறுத்துகின்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தனியார் பள்ளிகள் விடுமுறை விடுவதைக் கூட இந்துத்துவா அமைப்புகள் தடுக்க முயல் கின்றன. பன்முகத் தன்மை கொண்ட இந்தியா வின் பாரம்பரியத்திற்கு ஆர்எஸ்எஸ் பரிவாரம் பெரும் அவமானத்தை தேடித் தருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. 

ஒருபுறத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களை குறி வைத்து வழிபாட்டுத் தலங்களை சர்ச்சைக்குள்ளாக்குகிறது. அவர்களது குடியுரி மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் குடி யுரிமை திருத்தச் சட்டங்களை கொண்டு  வருகிறது மோடி அரசு. மறுபுறத்தில் சிறு பான்மை கிறிஸ்தவ மக்களும் தொடர்ந்து அச்சு றுத்தலுக்கு ஆளாகின்றனர். பாஜக பரிவாரத் தின் இந்த அட்டூழியத்தை மதச்சார்பின்மையின் மீதும் மதநல்லிணக்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒருசேர எதிர்க்க வேண்டும். இந்தியா எல்லோருக்குமானது.