headlines

img

ஊரக வேலை உரிமையைப் பறிக்கும் சட்டத்தை வலுவாக எதிர்ப்போம்!

ஊரக வேலை உரிமையைப் பறிக்கும் சட்டத்தை வலுவாக எதிர்ப்போம்!

இந்தியாவின் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார அரணாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் (கிராமின்)’ - (VB-GRAM G) என்ற புதிய சட்டத்திற்கு குடிய ரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்பு தல் அளித்துள்ளார். 

இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந் துள்ள நிலையில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இச்சட்டத்தைப் பெருமையுடன் தற்காத்துப் பேசி வருவது உழைக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் இச்சட்டத்தை ஒரு  “முன்னோக்கிச் செல்லும் படி” என வர்ணிப்ப தோடு, வேலை நாட்களை 100-லிருந்து 125-ஆக உயர்த்தி இருப்பதாகக் கூறி பெருமிதம் கொள்கி றார். ஆனால், இது ஒரு கவர்ச்சிகரமான மாயை மட்டுமே. நடைமுறையில், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் உச்சவரம்பு நிர்ணயிப்பதன் மூலம், தேவைக்கேற்ற வேலைவாய்ப்பு என்ற தத்துவத்தையே மோடி அரசு சிதைத்துள்ளது. இச்சட்டம் ‘வேலைக்கான உரிமை’ என்ற அடிப்படை அம்சத்தைத் தகர்த்து, ஒன்றிய  அரசை நிதிப் பொறுப்பிலிருந்து விடுவிப்ப தையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இச்சட்டத்தின் மிக ஆபத்தான அம்சம்  அதன் நிதிப் பகிர்வு முறையில் செய்யப் பட்டுள்ள மாற்றம். இதுவரை ஊதியச் செலவு 100 சதவீதம் ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டு வந்த நிலையில், இனி 60:40 என்ற விகிதத்தில் மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பின்மைக்கான உதவித் தொகை மற்றும் ஊதிய தாமதத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை மாநில அரசுகளின் தலையில் சுமத்துவது, ஒன்றிய அரசு தனது பொறுப்பிலிருந்து முற்றிலுமாக நழு விக்கொள்வதையே காட்டுகிறது. நிதி நெருக்கடி யில் உள்ள மாநிலங்களால் இந்தச் சுமையைத் தாங்க முடியாது என்பதால், நடைமுறையில் இத்திட்டம் முடக்கப்படும் அபாயம் உள்ளது.

ஒன்றிய அரசு உடனடியாக இந்த மக்கள் விரோதச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். உரிமைகள் அடிப்படையிலான வேலை உறு தித் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, அதை ஒரு நிதி ஒதுக்கீடு சார்ந்த திட்டமாக மாற்றுவது தேசத்தின் கிராமப்புறப் பொருளாதாரத்தையே சீரழிக்கும் செயலாகும். 

அமைச்சரின் வெற்றுக் கோஷங்கள் உழைக்கும் மக்களின் வயிற்றுப் பசியைப் போக் காது; மாறாக, சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே உண்மையான ‘விக்சித் பாரதத்தை’ (வளர்ச்சி பாரதம்) எட்ட முடியும்.