இது இரண்டாவது தாக்குதல்!
டிசம்பர் 26 முதல் ரயில் பயணிகள் கட்ட ணங்கள் உயர்த்தப்படுவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் கடந்த 21 அன்று அறிவித்தது. இது இந்தாண்டில் ரயில் பயணிகள் மீது நிகழ்த் தப்படும் இரண்டாவது தாக்குதலாகும். ஆனால் இதற்கு அமைச்சகம் கூறியுள்ள காரணம் ஏற்றுக் கொள்ள இயலாததாகும். ஓய்வூதியம் உள்ளிட்ட ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு, பயணி கள் பாதுகாப்புச் செலவுகள் போன்ற ரயில்வே செயல்பாடுகளுக்கான செலவுகள் அதிகரிப்பு என்று அமைச்சகம் கூறியுள்ளது கடும் கண்ட னத்துக்குரியதாகும்.
தொலைதூரப் பயணங்களுக்கும் பாது காப்பான பயணத்துக்கும் நாட்டு மக்கள் ரயில்க ளையே பயன்படுத்துகின்றனர். ஆனால் பாஜக ஒன்றிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உட னேயே 2014 ஜூன் 25 முதல் அனைத்து ரயில்க ளுக்கும், அனைத்து வகுப்புகளுக்கும் பயணி கள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி சரக்கு ரயில் கட்டணமும் 6.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன் படுத்தும் ரயில்களின் எண்ணிக்கையை அதி கரிக்காமல் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ என அதிவேக பிரிமியம் ரயில்களை அறிமுகப் படுத்தி ஒவ்வொரு 10 சதவீத சீட் நிரம்பும்போதும் 10 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த வரிசை யில் தேஜஸ் ரயிலும் இணைந்து கொண்டது. இந்த நிலையில் 2020இல் ஜனவரி 1 முதல் கட்டண சீரமைப்பு நடைமுறை என்ற பெயரில் சாதாரண ரயில்களுக்கு கி.மீ.க்கு 1 பைசாவும் மெயில், விரைவு ரயில் (ஏசி இல்லாததற்கு) களுக்கு கி.மீ.க்கு 2 பைசாவும் ஏசி ரயிலுக்கு கி.மீக்கு 4 பைசா வும் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஊழியர்கள் பற்றாக்குறை, பாதுகாப்பு குறைபாடுகள் காரண மாக கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்து கள் நடந்தன. அவற்றில் 748 பேர் பலியாகினர். 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 313 பேர் 40 விபத்து களில் உயிரிழந்தனர். இந்தக் காலத்தில் தான் கவாச் - பாதுகாப்பு தொழில்நுட்பம் பொருத் தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போதிய நிதி ஒதுக்காத அரசின் பாராமுகத்தாலும் அலட்சி யத்தாலும் கவாச் தொழில்நுட்பம் பொருத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே சமயம் ஊழியர்கள் பற்றாக்குறையும் அதிகரித்தது. ஆனால் இப்போது ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றுக் காக கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது திசை திருப்புவதாகும்.
ஆனால் இந்தாண்டு ஜூலை மாதம் தான் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது கூட 500 கி.மீ.க்கு மேல் தான் உயர்வு அதிகரித்தது. இப்போது மீண்டும் நான்கே மாதங்களில் 215 கி.மீ.க்கு முதலே சாதாரண ரயில் களுக்கு கி.மீ.க்கு 1 பைசாவும், மெயில், விரைவு ரயில், படுக்கை, ஏசி பெட்டிகள் ஆகியவற்று க்கு 2 பைசாவும் என டிசம்பர் 26 முதல் உயர்த்தி யிருப்பது அநியாயமாகும். மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது திரும்ப வும் வழங்கப்படவில்லை. அதிவிரைவு ரயில்க ளில் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என் பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த வேளை யில் இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.
