tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜனவரி 6-க்குள் பொங்கல்  வேட்டி, சேலை!

சென்னை, டிச. 23 - பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் வேட்டி - சேலைகள், நடப்பாண்டு, அனைத்துக் குடும்ப அட்டைதாரர் களுக்கும், ஜனவரி 6-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தகவல் தெரி வித்துள்ளார். விநியோகத்திற்கான வேட்டி - சேலைகள், டிசம்பர் 15-ஆம்  தேதியே வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 டிஎன்பிஎஸ்சி பாடத் திட்டத்தில் மாற்றமில்லை!

சென்னை, டிச. 23 - 2026-ஆம் ஆண்டில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்று தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. “2026ஆம் ஆண் டில் நடைபெறவுள்ள ஒருங்கி ணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 1, 2, 2ஏ மற்றும் 4 பணிகளுக்கான தேர்வுகள், தேர்வாணைய இணையதளத்தில் 2024 டிசம் பரில் வெளியிடப்பட்டுள்ள பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடை பெறும். பாடத்திட்டம் மீண்டும்  மாற்றப்படும் என சமூக வலைத் தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.  

தங்கம் மேலும்  ரூ. 1,600  விலை உயர்ந்தது!

சென்னை, டிச. 23 - தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், செவ்வாயன்று பவுனுக்கு மேலும் ரூ.1,600 உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, திங்க ளன்று காலையில் ரூ. 640, மாலை யில் ரூ. 720 என ஒரேநாளில் ரூ.1,360 அதிகரித்து பவுன் 1 லட்சத்து  560 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்து 1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது.