இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி உதவி
கொழும்பு, டிச. 23 - ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா 4,031 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு வெளி யுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து செய்தி யாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நிதியுதவி அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது ஜெய்சங்கர், மேலும் பேசுகையில், 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியி லிருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருந்த வேளையில், டிட்வா இயற்கை பேரிடர் புதிய நெருக்கடி களை உருவாக்கியுள்ளது. இந்த இக் கட்டான நேரத்தில் இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என குறிப்பிட்டார். தனது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவைச் சந்தித்தும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
