tamilnadu

img

செவிலியர்களின் நியாயமான போராட்டம் முதல்வர் தலையிட்டு தீர்வு காண பெ. சண்முகம் வலியுறுத்தல்!

செவிலியர்களின் நியாயமான போராட்டம் முதல்வர் தலையிட்டு தீர்வு காண பெ. சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை, டிச. 23 - தொகுப்பூதிய செவிலியர்கள் 6-ஆவது நாளாக போராடி வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், தமது  சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மாநிலம் முழுவதும் செவிலியர் கள் தங்களின் நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தி, கடந்த 6 நாட்களாக அமைதியான முறையில் போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடையில் சுகா தாரத்துறை அமை ச்சர் அவர்கள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உரிய தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர்க ளைக் காவல்துறையினர் வலுக்கட்டாய மாகப் பேருந்துகளில் ஏற்றி, தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் செயல் வன்மை யான கண்டனத்திற்கு உரியது. அமை தியான முறையில் போராடுவதற்கு அர சியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை யைப் பறிக்க ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, செவிலியர்களின் கோரிக் கைகள் குறித்துச் சுமூகமான முறை யில் தீர்வு காண முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.