states

img

மேற்குத் தொடர்ச்சி மலைகளை சுரங்கத்திற்காக அழிக்க மோடி அரசு திட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளை சுரங்கத்திற்காக அழிக்க மோடி அரசு திட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலைகளை சுரங்கத்திற்காக அழிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக சிவ சேனா (உத்தவ்) கட்சியின் பொதுச்செய லாளர் ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆர வல்லி மலைத்தொடரை அழிக்கும் திட்டத் திற்கு ஆதரவளிப்பதைப் பார்ப்பது மிகவும் வெட்கக்கேடானது. இந்த விஷ யம் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் ஏன் பொய் சொல்லப்படுகிறது என்பதுதான் முதல் கேள்வி? ஆரவல்லி மலைத்தொட ரின் ஒரு சிறிய பகுதி கூட ஏன் சுரங்கத்திற் காக திறக்கப்படுகிறது? இவ்வளவு ஆர்வம் ஏன்? இந்தியாவின் சுற்றுச்சூழ லின் ஒவ்வொரு பகுதியையும் அழிக்க பாஜக ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறது? நாட்டில் சமூக நல்லி ணக்கம் அழிக்கப்படுவதைப் போலவே இயற்கையும் அழிக்கப்படுகிறது. இன்று  ஆரவல்லி மலைத்தொடர், நாளை மேற்குத் தொடர்ச்சி மலைகள் சுரங்கத் திற்காக திறக்கப்படும் என்ற அச்சம் உள்ளது” என அவர் குற்றம்சாட்டி யுள்ளார்.