tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

வாளையாறில் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், கேரளாவின் பன்முகத்தன்மை மற்றும் சட்ட நிர்வாகப் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட அவமானகரமான கறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட நபரை ‘வங்கதேச முஸ்லிம்’ என்று கூறி, கும்பலைத் தூண்டிவிட்டது பாஜகவினர் தான்.

மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் (உ.பி., ஆதித்யநாத்) முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்புணர்வினைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். அதே சமயம் பிரதமர் மோடி இஸ்லாமிய நாடுகளிடமிருந்து மிக உயரிய குடிமை விருதுகளைப் பெறுவதில் பிஸியாக இருக்கிறார். 

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஓவைசி

இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும், ‘இந்து ராஷ்டிரா’ அமைப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிகழ்வுக்கு மோடி அரசு ஆதரவு அளித்துள்ளது. இதில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள்  வெறுப்புப் பேச்சுகளைக் கண்டிக்கவில்லை. 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூபேஷ் பாகேல்

சத்தீஸ்கரின் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பாஜக இரட்டை எஞ்சின் அரசு, 21 குவிண்டால் நெல்லுக்கு நூறு கிலோ எடையைக் குறைப்பதாக குற்றம் சாட்டு எழுகிறது. இது என்ன வகையான திருட்டு.