பாஜகவின் ஊழல் வலைப்பின்னல்!
நீங்கள் ஒரு வலைதளத்தில் பார்க்கிறீர்கள்: “தூய்மை இந்தியா (சுவச் பாரத்)” திட்டத்திற்கு நன்கொடை அளியுங்கள், “பெண் குழந்தைக ளைக் காப்போம் (பேட்டி பச்சாவோ)” திட்டத் திற்குப் பங்களியுங்கள், “விவசாயிகளுக்கு” உத வவும் (கிசான் சேவா). நீங்கள் நினைக்கிறீர்கள்: “நல்ல விஷயம், நாட்டுக்கு நான் உதவுகிறேன்” என்று பணம் கொடுக்கிறீர்கள். ஆனால் உண்மை என்ன? அந்தப் பணம் எல்லாம் நேரடி யாக பாஜக கட்சியின் வங்கிக் கணக்கில் சேர்கி றது! அரசுத் திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூடச் செல்லவில்லை!
சென்னை பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் ஒன்றிய அரசிடம் கேட்கிறார், “இந்த நன் கொடை வசூலுக்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர் களா?”. மூன்று அமைச்சகங்களும் சொன்ன பதில், “இல்லை! நாங்கள் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இந்தத் திட்டங்களுக்கு நன்கொடை வசூலிக்க எந்த விதியும் இல்லை!”. ஆனால் 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை, narendramodi.in வலைதளமும், நமோ செயலி யும் இந்த அரசுத் திட்டங்களைத் தேர்வு செய்து நன்கொடை அளிக்கும் வசதியை வழங்கின. பிர தமர் அலுவலகம் சொல்கிறது, “நமோ செயலி அதிகாரப்பூர்வமானது இல்லை. எங்களுக்கு அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்று. அப்படியானால் பாஜக, அரசுத் திட்டங்களின் பெயரைத் திருடி, மக்களை ஏமாற்றி, கட்சிக்குப் பணம் சேர்த்திருப்பது உறுதியாகிறது.
இது குறித்து அரவிந்தாக்சன் அளித்த புகார்களுக்கு இன்றுவரை பதில் இல்லை. இது ஆச்சரியமல்ல, ஏனெனில் பதில் சொல்ல உண்மை இல்லை. இந்த ஊழல் வெறும் நிதி முறைகேடு மட்டுமல்ல. இது அரசியலமைப் பையே கொள்ளையடிக்கும் முயற்சியாகும்.
ஏற்கனவே அரசின் திட்டங்களை ஒதுக்கீடு செய்வதற்கும், அனுமதி வழங்குவதற்கும் பாஜக லஞ்சப் பணத்தை தேர்தல் பத்திரத்தின் மூலம் பெறும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. ஆரோபிண்டோ பார்மா நிறுவனம் அரசு மானி யம் பெறத் தேர்வான 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வழங்கியிருக்கி றது. இதேபோன்று ரூ.3.7 லட்சம் கோடி மதிப்புள்ள 172 அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற 33 நிறுவனக் குழுக்கள், பாஜகவிற்கு ரூ.1,700 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வழங்கி யுள்ளன. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசார ணையில் சிக்கிய 30 நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.335 கோடி அளிக்கின்றன. அதன் பின் அந்த வழக்குகளின் விசாரணை நீர்த்துப் போகிறது. இதுவெல்லாம் தற்செயல் நிகழ்வா?
இந்த ஆதாரங்களைக் கணக்கிட்டால் ஒரு விஷயம் தெளிவாகிறது: நாட்டின் மிகப்பெரிய ஊழல் கட்சி என்றால், அது பாரதிய ஜனதா கட்சிதான். இந்த மெகா ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணையும், முறையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையேல், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
