headlines

img

ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க சதி!

ஜனநாயகத்தின் கழுத்தை  நெரிக்க சதி!

மக்களாட்சி அமைப்பில் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று, வாக்காள ரின் உரிமையும், கூட்டாட்சித் தத்துவமுமாகும். ஆனால், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவரத் துடிக்கும் மசோ தா, இந்த இரண்டு அடிப்படை தூண்களையும் சிதைக்கும் அபாயம் கொண்டதாக உள்ளது. சட்டம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன், சட்ட ஆணையத் தலைவர் தினேஷ் மகேஷ்வரி அளித்த பதில்களில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடுமையான கேள்விகள், இந்தத் திட்டத்தின் மக்கள் விரோத நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரி யங்கா  காந்தி இந்தத் திட்டம் நாட்டுக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கும் என்று சட்ட ஆணை யத்திடம் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், இந்தக் கேள்விகளுக்குப் போதுமான, திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது, இத்திட்டத் தின் மீதான ஆழமான ஐயங்களை உறுதிப் படுத்துகிறது

சட்ட ஆணையத் தலைவர், “மக்கள் தேர்தல் அட்டவணை மற்றும் கால அவகாசம் குறித்துக்  கவலைப்படாமல், வாக்காளராகத் தங்கள் பங்கில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசி யது, அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் செயல்பாட் டில் வாக்காளரின் உரிமையையும், அதிகா ரத்தையும் புறக்கணிக்கும் இத்தகைய பார்வை, ஜனநாயகத்தை அப்பட்டமாகக் கொச்சைப் படுத்துவதாகும். தொடர்ந்து வரும் இடைவெளி யிலான தேர்தல்கள்தான், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தேர்தல்களில் தங்கள் தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய மக்க ளுக்கு வாய்ப்பளித்து, சரிபார்த்தல் மற்றும் சமன் படுத்துதல் (Checks and Balances) என்ற ஜனநா யகக் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. ‘ஒரே தேர்தல்’ முறையால் இந்த வாய்ப்பு பறிக்கப்படும்.

தேர்தல் செலவைக் குறைப்பது, நிர்வாகச் சுமையைக் குறைப்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், இவையெல்லாம் கூட்டாட்சித் தத்துவத்தை பலியிடும் கொடுமை அளவிற்கு முக்கியமானதல்ல. மாநில சட்ட மன்றங்களின் பதவி காலத்தைக் குறைக்கவோ அல்லது நீட்டிக்கவோ முயல்வது, மாநில அரசு களின் அதிகாரத்தைப் பறிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும். இது மறைமுகமாக ஒற்றை ஆட்சி முறையை நிறுவ முயற்சிக்கும் செயல் என்ற இடதுசாரிக் கட்சி களின் நிலைப்பாட்டிற்கு மேலும் வலுசேர்க்கிறது.

இந்த முக்கியமான சட்டத்தை அவசரகதி யில், போதுமான பொது விவாதம் இன்றித் திணிப் பது, ஜனநாயக மரபுக்கு எதிரானது. இந்த மசோ தாவின் அரசியல் சட்ட அடிப்படை மற்றும் கூட்டாட்சி மனப்பான்மை மீதான தாக்குதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது, ‘ஒரே தலை வர், ஒரே கட்சி’ என்ற சர்வாதிகார நோக்குடை யவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். இது ஜன நாயகத்தை வலுப்படுத்தாது; மாறாக அதனை அடியோடு வேரறுத்துவிடும்.