tamilnadu

img

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியிலிருந்து நீக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியிலிருந்து நீக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, டிச. 5 - நீதிபதியாக நீடிப்பதற்குத் தகுதியற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக் கிழமை (டிச. 5) சென்னை உயர் நீதிமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் துறைமுகம் பகுதிக்குழு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா  தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, சி. திருவேட்டை, இ. சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், கே. முருகன், வே. ஆறுமுகம், வி. தனலட்சுமி, எஸ்.வி. வேணுகோபாலன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும், ஆர்எஸ்எஸ் மத வெறி கூட்டத்திற்கு சாதகமாக- ஒரு சார்பாக தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;  அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முழக்கங் கள் எழுப்பப்பட்டன.

த்திருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். சங்-பரிவாரங்களின் முரண்பாடு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் சபரி மலை அய்யப்பன் கோவிலில் பெண்கள்  வழிபாடு செய்யலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அந்தத் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்று சொல்லி நாடு முழுவதும் கலவரத்தை உருவாக்கியவர்கள் சங்பரிவார கும்பல்கள். அன்றைக்கு உச்ச நீதி மன்றம் ஒன்றியப் பாதுகாப்புப் படையை அனுப்ப முடிவு செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வானளாவிய அதிகாரம் இல்லை ஆகவே, நீதிபதிகளுக்கும் நீதிமன்றத் திற்கும் ஏற்கெனவே சட்டப்படியான வரம்புகள் உள்ளன. நீதிபதிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை இந்திய அரசி யலமைப்புச் சட்டம் வழங்கவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். தன்னிச் சையாகவும், தானடித்த மூப்பாகவும் அவர்கள் செயல்படுவதற்கு எந்த உரிமை யும் கிடையாது. தவறான தீர்ப்பை அளித் ததற்காக பாண்டியன் நெடுஞ்செழியன் உயிரை விட்டார் என்ற சிலப்பதிகார காப்பியம் பாடப்பட்ட இடம் மதுரை. அங்கிருந்து தான் நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் தவறான தீர்ப்பை வழங்கி யிருக்கிறார். மதச்சார்பின்மைக்கு எதிரானவர் இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கமாகவே மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், ஒரு குறிப்பிட்ட சாரா ருக்குச் சாதகமாகவும் தீர்ப்பு அளிப்பதை  வழக்கமாக வைத்துள்ளார். பாரபட்சமாக நீதி வழங்குவதற்கு எந்த நீதிபதிக்கும் உரிமை கிடையாது.

எல்லா மக்களுமே நீதிமன்றத்தை நாடி வருவது, தங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான். ஆனால்,  சுவாமிநாதன் போன்ற நீதிபதிகளால் நீதித்துறையின் மாண்பே அழிக்கப்பட்டு வருகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சுவாமி நாதன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யிடம், நீதிபதி சுவாமிநாதன் இதுவரை  வழங்கியுள்ள தவறான மற்றும் பாரபட்ச மான தீர்ப்புகள், மதச்சார்பின்மைக்கு விரோதமான தீர்ப்புகள் சம்பந்தமாக எழுத்துப் பூர்வமாகப் புகார் அளிக்கத் தீர்மானித்துள்ளோம். மதுரையின் வளர்ச்சித் திட்டத்திற்கு எதுவும் செய்யாத கும்பல் பாஜக.

அங்கே  எய்ம்ஸ், மெட்ரோ, வேறு பல தொழிற்சா லைகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மதுரையின் வளர்ச்சிக்காகக் கடுகளவு  கூட எதுவும் செய்யாத பாஜக கும்பல்,  மதுரையை கலவர பூமியாக மாற்றுவ தற்கு இரவு பகலாகப் பாடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அதற்கு நீதிமன்றம் துணை  போவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஆகவே, மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? மதவெறி அரசியலா? என்ற  கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.

மக்களைத் திரட்டி போராடுவோம்!

திருப்பரங்குன்றத்தில் மதவெறிக் கும்பலின் இந்த அடாவடித்தனம், நீதிமன்றத்தின் வரம்பு மீறிய செயல் ஆகியவற்றைக் கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் மதுரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளக்கூடிய மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது சம்பந்தமாக திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் தீர்மானிப்போம்”

கலவரக் கும்பலுக்கு துணை நிற்பவர் நீதிபதியாக இருக்க முடியாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்போம் :  பெ. சண்முகம்

சென்னை, டிச. 5 - உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு வெள்ளிக் கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்றத்தின் உதவியோடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில், நவம்பர் 3 அன்று தீபம் ஏற்றப்பட்டு முருக பக்தர்கள் தங்க ளது வேண்டுதலை முடித்துள்ளனர். இதற்குப் பிறகு, நவம்பர் 4 அன்று மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.  சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு யாரும் எதிர்பாராதது. கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை நட்சத்தி ரத்தில் தான் ஏற்றப்பட வேண்டும். இதுவரை குறிப்பிட்ட நேரம் மற்றும் நட்சத்திரத்தில் தான் ஏற்றப்பட்டு வந்துள்ளது. அந்த நட்சத்திரம் முடிந்த பிறகு நேற்று உத்தரவு பிறப்பித்தது, அவருடைய பிடிவாதத்தையும் அடாவடித்தனத்தையும் காட்டுகிறது. இதில் துளியளவும் நியாயம் இல்லை. நீதிபதிக்கு உரிமை இல்லை வழக்கமாக தீபம் ஏற்றும் இடத் திற்குப் பதிலாக மாற்று இடத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி எந்த விதமான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. பல நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் முறைப்படி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, சம்பந்தம் இல்லாத மனுதாரரை, தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள் என்று உத்தரவிடுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு என்ன உரிமை உள்ளது? சிஐஎஸ்எப் நீதிமன்ற பாதுகாப்புக்கே! ஒன்றியத் தொழில் பாதுகாப்புப் படையை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அனுப்பிய முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு நீதிபதியும் அவர்கள் வெளியிடும் தீர்ப்பை அமல்படுத்த, ஒவ்வொரு படையை வைத்துக் கொள் வதற்குச் சட்டம் இடமளிக்கிறதா? என்ற கேள்வியை நாங்கள் முன் வைக்கிறோம். ஒன்றியத் தொழில் பாதுகாப்புப் படை என்பது நீதி மன்றப் பாதுகாப்புக்கு மட்டுமே. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சட்ட விரோதமாகப் போட்ட உத்தரவை, மதுரை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வும் ‘சரி’ என்று சொன்னது ஏற்கத்தக்கது அல்ல. ஒருவேளை மத்திய படை அங்கே இல்லாமல்