states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மாநிலங்களவை எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பேரளவிலான சீர்கேடு, இந்த நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கம் இரட்டைக் கட்டுப்பாட்டை (இருவர் ஆதிக்க முறை) கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் சிவில் விமானத் தொழிலில் பிற விமான நிறுவனங் களுக்குப் பங்கோ அல்லது குரலோ இல்லாமல் செய்துள்ளது.  இதுதொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

சிவசேனா (உத்தவ்) பொதுச்செயலாளர் ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அமைச்சர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்கள். ஆனால் எந்த ஒப்பந்தத்தையும் கொண்டு வராமல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்

சிங்கப்பூரில் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது தான் அசாமின் கலாச்சாரமாக கருதப்படும்  ஜூபின் கார்க் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.  ஜூபின் கார்க் ஆற்றிய பணிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர்

நன்கொடை பெற்றுக் கொண்டு தேவையில்லாத சலுகைகள் வழங்கப்படும் போது, அதிகாரம் மிகுந்த போக்குகள் வளரும். இதனால் நெருக்கடி உருவாகும். இதற்கு எடுத்துக்காட்டு இண்டிகோ விமான சேவை  முடக்கம் ஆகும்.