ஆந்திராவில் சிபிஎம் தலைவர் படுகொலையை கண்டித்து முழுஅடைப்புப் போராட்டம்
பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 28ஆம் தேதி போதைப்பொருள் - கஞ்சா மாபியா குண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பிரஜா நாட்டிய மண்டலி என்ற கலாச்சாரக் குழுவின் செயலாளருமான தோழர் பென்சலையா படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து டிசம்பர் 2ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் நெல்லூர் மாவட்டத்தில் முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
