மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா; மதவெறி அரசியலா? முதல்வர் கேள்வி
சென்னை, டிச. 5 - திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை, அரசியல் பிரச்சனையாக்கி ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதி விட்டுள்ளார். அதில், “மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பதிவை வர வேற்று, சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “அமைதி தவழும் தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்ற அனுமதியோம். மதுரை எப்போதும் அன்பின் பக்கம், அமைதியின் பக்கம், வளர்ச்சியின் பக்கமே!” என்று குறிப்பிட்டுள்ளார்.
