மோடி மரபுகளை மாற்றுகிறார் சமாஜ்வாதி கடும் கண்டனம்
மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் மரபுகள் மாறி விட்டன என கூறி சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் கடும் கண்டனம் தெரிவித்து ள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில், “மோடி பிரதமராக பதவியில் அமர்ந்த பின்பு நாட்டில் பல மரபுகள் மாறிவிட்டன. வெளிநாட்டு தூதர்கள் அல்லது தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவர்கள் ஆளும் கட்சியை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலை வர்களையும் சந்திப்பது ஒரு பாரம்பரிய மாக இருந்தது. ஆனால் பாஜக இந்த நீண்டகால மரபுகளை மாற்றியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க அனுமதி மறுத்து வருகிறது” என அவர் குற்றம்சாட்டினார். பாஜக மழுப்பல் “வெளிநாட்டிலிருந்து வரும் தலை வர்கள் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாட்டின் அரசே முடிவு செய்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு உதவுகிறது. அதனால் யாரைச் சந்திப்பது என்பதை அரசாங்கத்தால் முடிவு செய்ய முடி யாது” என்று பாஜக எம்பி சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
