ஒன்றிய அரசின் விபரீத முயற்சி!
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயை கணிசமாகக் குறைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16 ஆவது நிதி ஆணையத்திடம் ஒன்றிய அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக செய்திகள் வந்துள் ளது அதிர்ச்சியளிக் கிறது. ஒன்றிய அரசின் யோச னைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான அமைச்சரவை ஒப்புதல் அளித்து பின்னர் நிதி ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று தெரி கிறது. இந்த ஆணையம் ஏற்கெனவே அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து அவர்க ளின் கருத்துக்களை கேட்டது. வரி வருவாயில் மாநிலங்களின் பங்கில் ஒரு விழுக்காடு குறைவ தால் இந்தாண்டு எதிர் பார்க்கப்படும் வரிவசூலில் ஒன்றிய அரசுக்கு கூடுதலாக ரூ.35,000 கோடி ரூபாய் கிடைக்கும்.
பொதுவாக நிதி ஆணையங்கள் அமைக்கப் படும் போது அவற்றுக்கு அளிக்கப்படும் பணிப் பட்டியல்கள் மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடும் வகையிலும் ஒன்றிய அரசின் நிலை பாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்கும் வகையிலும் உள்ளன. 16ஆவது நிதியா ணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பணிப் பட்டிய லும் அப்படித்தான் உள்ளது. நிதிப் பகிர்வு அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் வேளை யில் ஒன்றிய அரசின் முயற்சி மாநில அரசுகளுக் கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்திவிடும்.
அதிகமான நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளதால் மாநில அரசுகளின் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மாநில அரசு கள் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் அதிக மான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதற்கு மாநி லங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. நிதியாணையத்தின் பரிந்துரைகள் இந்த அம் சத்தை கணக்கில் கொள்ளவேண்டும். மக்கள் தொகையை காரணம் காட்டி நிதியை குறைக்கிற அணுகுமுறையை கைவிடவேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஊக்குவித்தல் நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒன்றிய அரசு செஸ், சர்சார்ஜ் மற்றும் சுங்கக் கட்டணம் என்று பல வடிவங்களிலும் வருவாயைத் திரட்டு கிறது. எனினும் இவை எதுவும் மாநிலங்களுடன் பகிரப்படுவது இல்லை. இந்த வகையில் வசூ லிக்கப்படும் வருவாய் அனைத்தையும் ஒன்றிய அரசு தனது கருவூலத்திலேயே வைத்துக் கொள்கிறது.
மொத்த வரிவசூலில் மாநிலங்களின் மொத்த பங்கு குறைந்தபட்சம் 50 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும். மாறாக தற்போது பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மேலும் வெட்டுவது என்ற நிலைக்கு ஒன்றிய அரசு செல்வதை நிதியாணையம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
REGISTRATION OF NEWSPAPER (CENTRAL)
RULES, 1957
FORM IV (SEE RULE 8)
Statement about Ownership and other
Particulars about Theekkathir Tamil Daily
1. Place of Publication : Venmani Illam,
K.Anantha Nambiar Nagar,
Karur By-Pass Road,
Trichirappalli - 620 002
2. Periodicity of Publication : Daily
3. Publisher’s Name : M.N.S.Venkataraman
Whether Citizen of India : Yes
Address : 6-158/NA, South Street,
M.Reddiappatti,
Aruppukkottai - Taluk,
Virudhunagar Dist - 626 118
4. Editor’s Name : C.Ramalingam
Whether Citizen of India : Yes
Address : 6/16, By Pass Road,
Madurai - 625 018
5. Printer’s Name : M.N.S.Venkataraman
Whether Citizen of India : Yes
Address : 6-158/NA, South Street,
M.Reddiappatti,
Aruppukkottai - Taluk,
Virudhunagar Dist - 626 118
6. Printed at : M/s. V.C.Printograph
Address : No. 144, M.K.Kottai Road,
Elumalaiyan Rice MIll Complex,
Ambikapuram, Ariyamangalam,
Trichirappalli - 620 010
7. Name and address of Owned by
Individual who own Toilling Masses
the Newspaper and Welfare Trust
Partners of share 27, Vaidyaram Street,
holders holding more T.Nagar,
than one percent of Chennai - 600 017.
the capital
I, M.N.S.Venkataraman hereby declare that the Particulars given above are true to the best of my knowledge and belief.
Trichirappalli. M.N.S.Venkataraman
01.03.2025 Publisher.