போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு கடந்த 22 மாதங்களாக ஓய்வுக்கால பணப்பலன்களை அரசு வழங்காமல் உள்ளது. வடபழனி பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வெள்ளியன்று (பிப்.28) பணி ஓய்வு பெற்ற எஸ்.அசோகனுக்கும் ஓய்வுக்கால பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அவர் குடும்பத்துடன் பணிமனையில் தர்ணாவில் ஈடுபட்டார்.