districts

மேல்மருவத்தூரில் வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் நின்று செல்லவும், சென்னை கடற்கரையில் இருந்து மேல்மருவத்தூர் வரை மின்சார ரயில்களை இயக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒன்றிய தலைவர் ப.க.சத்தியமூர்த்தி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சங்கத்தின் சித்தாமூர் ஒன்றிய பொருளாளர் பிரதாபன், ஒன்றிய துணை செயலாளர் விஜய், இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சுர்ஜித், கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.