சென்னை, பிப்.28- பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் அதிக எதிர்பார்ப்பு களை உருவாக்கியிருக்கும் தேசிய அளவி லான, கலாச்சார திருவிழா மிலான்’25, 2025 மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மிகப் பிரமாண்டமாக நடை பெறவிருக்கிறது. ரூ.15 லட்சம் என்ற மொத்த பரிசுத் தொகையுடன் 40-க்கும் அதிகமான நிகழ்ச்சி களுடன் 4 நாட்கள் நிகழ்வாக நடை பெறவிருக்கும் இக்கலைத் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து திறமைமிக்க மாண வர்கள் கலந்துகொள்கின்றனர். மார்ச் 3-ம் தேதியன்று நடைபெற விருக்கும் மாபெரும் தொடக்கவிழா நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் அதர்வா முரளி மற்றும் காயடு லோஹார் ஆகியோர் கலந்துகொண்டு கலைவிழா நிகழ்ச்சிகளை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கின்றனர். அன்றைய இரவு 15 உறுப்பினர்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற ராக் இசைக்குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. உலகெங்கிலும் தங்களது சிறப்பான இசை ஆல்பங்களான நவரசம் (2016) மற்றும் நமா (2019) ஆகியவற்றின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கைவசப்படுத்தியிருக்கும் இந்த இசைக்குழு இதுவரை 25 நாடுகளில் 650-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. மார்ச் 4-ம் தேதியன்று, புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ். தமன் வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கலைத் திருவிழாவானது மார்ச் 6-ம் தேதியன்று நிறைவடையும். இந்த தகவலை எஸ்ஆர்எம் பல்கலை கழக துணைவேந்தர் சி.முத்தமிழ்ச் செல்வன், மாணவர் விவகாரங்களுக்கான இயக்குநர் நிஷா அசோக் ஆகியோர் தெரிவித்தனர்.