districts

img

சென்னை அண்ணா சாலையில் நிலஅதிர்வா?

சென்னை, பிப்.28- சென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வரு கிறார்கள். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அப்போது பகல் 12 மணியளவில் 5 மாடி கட்டிடம் லேசாக குலுங்கியதாகக் கூறப்படு கிறது. நில அதிர்வு ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் ஊழி யர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல்துறையினர் உண்மை யில் நில அதிர்வு ஏற்பட்ட தா? அல்லது வதந்தியா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் பாலம் அமைப்பதற்காக தூண்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் லேசான அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய புவியியல் அமைப்பு கூறுகையில், ரிக்டர் அளவு கோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என தெரி வித்துள்ளது. ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.