தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை, பிப்.28- மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் நாகர்ஜுனா ரெட்டி (40). இவர் மீது இந்தூர் மாநகர காவல்துறை குற்றப்பிரிவில் மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை யடுத்து இந்தூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் நாகர்ஜுனா ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் பிடிகொடுக்காமல், தொடர்ந்து தலைமறை வாக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வெள்ளியன்று நாகார்ஜுனா கைது செய்யப் பட்டார்.
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள்
சென்னை, பிப்.28- தென்காசி செங் கோட்டை- சென்னை தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. மார்ச் 1 முதல் மார்ச் 18ம் தேதி வரை தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு ரயில் (20681), மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயிலில் (20682) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதேபோல மார்ச் 2 முதல் மார்ச் 16ம் தேதி வரை தாம்பரம் - நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை ரயிலில் (22657), மார்ச் 3 முதல் மார்ச் 17ம் தேதி வரை நாகர்கோவில் - தாம்பரம் மும்முறை சேவை ரயிலில் (22658) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரி வித்துள்ளது.
அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்குக
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கடலூர், பிப்.28- கொடுக்கன் பாளையம் பகுதியில் 3 தலை முறைகளாக பயிர் செய்து வரும் 162 ஏக்கர் நிலங்களை அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இதில் கலந்து கொண்ட, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் கோ.மாதவன் பேசும் போது, கடலூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர், மாவட்டத்திற்கு முத்தான 10 திட்டங்களை அறிவித்தார். தமிழக முதல்வர், வேளாண் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்ச ருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம். முப்போக சாகுபடி நிலமாக மலை யடி குப்பம், பெத்தான் குப்பம், கிராமத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க உள்ள தாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறி ஞர் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் தோல் தொழிற்சாலை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். 200 ஆண்டுகளாக பயிர் செய்து வந்த விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான முந்திரி, மா, பலா மரங்களை வெட்டி சாய்ந்துள்ளனர். தலைமுறை தலை முறையாக அனுபவத்தில் உள்ள நிலத்தை விவசாயிகளுக்கு சிறப்பு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் புவனகிரி பகுதியில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை 15 நாட்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இஐடி பாரி சர்க்கரை ஆலையில் பிடித்தம் செய்த கழிவு தொகையை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் ஈச்சங்காடு பகுதிக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அண்ணா கிராமம் காந்தி பேசுகையில், பிற்படுத்தப்பட்டோருக்கு நீர்ப்பாசன கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பி.ரவீந்திரன் பேசுகை யில், வீராணம் ஏரியை தூர்வார வேண்டும். புவனகிரி வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுதல் தடுக்க கதவணை அமைக்க வேண்டும் என்று கூறினார். வேல்முருகன் பேசுகையில், எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பாண்டியன் பேசும்போது, வையூர் பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர் வரவேண்டும். மதியழகன் பேசும் போது, விவசாயிகளுக்கு தனி மருந்தகம் அமைக்க வேண்டும்.விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
சாத்தனூர் அணையை திறந்து விவசாயத்தை பாதுகாக்க கோரிக்கை
விழுப்புரம், பிப்.28- விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள விவசாயி களின் கருகும் பயிர்களை காப்பாற்ற சாத்த னூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யரிடம் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.முத்துவேல் மனு கொடுத்தார். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையை நம்பி கண்டாச்சி புரம் வட்டம் மற்றும் காணை ஒன்றியத்தை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பம்பை வாய்க்கால் பாசன தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் கைகொடுக்கும் என நம்பி நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர். ஆனால், தற்போது ஏரியில் பாசன தண்ணீர் கொள்ளளவு வெகு விரைவாக குறைந்து கொண்டே வருகிறது பம்பை வாய்க்கால் பாசனம் மூலம் எட்டு கிராமங்களில் நேரடி நெல் பயிர் பாசம் பெறுகின்றது, விவசாயிகள் பயிர்கள் கதிர் வரும் நிலையில் உள்ளன. கதிர் முற்றி அறு வடைக்கு தயாராகும் இந்த நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் தென்பெண்ணை ஆறு மூலம் பாசன வசதி பெறும் விவ சாய நிலங்கள் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சாத்தனூர் அணை முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. வழக்கமாக சாத்த னூர் அணை மார்ச் மாத இறுதியில் தான் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வழக்கம் போல் மார்ச் இறுதி யில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, ஏற்கெனவே புய லால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள விழுப்புரம் மாவட்ட விவ சாயிகளின் பல்லா யிரக்கணக்கான ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாக அழிந்து, சாவியாக மாறி போகும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் அவர்களது பல மாத உழைப்பும் பலனின்றி வீணாகப் போகும் அபாயம் ஏற்படும். இதனால் மாவட்ட ஆட்சியர் உடனடி யாக தலையிட்டு விழுப்புரம் மாவட்ட விவ சாயிகளின் நலன் கருதி மார்ச் முதல் வாரத்தில் முன் கூட்டியே சாத்தனூர் அணை பாசனத்துக்கு திறக்க செய்து, நட வடிக்கை எடுத்து விழுப்புரம் மாவட்ட விவ சாயிகளையும், அவர்களது பயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
மஞ்சக்குப்பம் மைதானம் ரூ.35 கோடியில் மேம்படுத்தப்படும் மாவட்ட ஆட்சியர் தகவல்
கடலூர், பிப்.28- மஞ்சக்குப்பம் மைதானம் அதன் சுற்றுவட்டப் பகுதியில் மேம்படுத்தும் பணி முதல்வர் அறிவிப்பின்படி விரைவில் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். கடலூர் மாவட்டத்தில் அடையாளமாக விளங்கும் பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் பாரம்பரியத்தை பிரதி பலிக்கும் வகையில் 2,200 நபர்கள் அமரக்கூடிய அரங்கம், மைதானத்தை சுற்றி உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள், பெரிய விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட வணிக வளாக கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு அருகே உள்ள சுப்பராயலு பூங்கா நவீன வசதியுடன் மேம்படுத்தப்படும். மஞ்சக்குப்பம் மைதானத்தில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவை யான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா வும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அரங்கு களும், பசுமையான நகர்ப்புற சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்படுகிறது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் சுற்றி 3 பெரிய முன் வாயில்கள், குடிநீர் வசதி, மின் வசதி, அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இதற்கான பணிகளை மேற்கொள்ள ஆலோசகர் நியமிக்கப்பட்டு கட்டுமானப் பணி கள் மேற்கொள்ளப்படும். பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் பொழுது கடலூர் மாவட்டத்தில் சிறந்த பொழுது போக்கு பூங்காவாக மஞ்சக்குப்பம் மைதானம் திகழும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த செயலி
சென்னை, பிப்.28- குழந்தைகள் செல்போன், கணினி உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தும் போது அவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில் பெற்றோர் கட்டுப்படுத்தும் Parent Geenee என்ற டிஜிட்டல் செயலியை திரைக்கலைஞர் மாதவன் அறிமுகப்படுத்தினார். சென்னையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் இதை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களை இந்த செயலி யால் கட்டுப்படுத்த முடியும் என்றார். செல்போன் பயன்பாடு மற்றும் சமூக வலைத்தளங்கள் தாக்கத்தி லிருந்து குழந்தைகளை ஒழுங்கு படுத்துவதற்காக இந்த செயலி பயன்படும் என தெரிவித்தார். நமது வீட்டில் உள்ள குழந்தைகள் தனி யாக அறையில் உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் எதை பார்க்கிறார்கள். யாரிடம் பேசிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு எது சரி, எது தவறு என புரிய வைக்கவேண்டும். மேலும் தவறான இணைய பக்கங்க ளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அவர்களின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்த செயலியை பயன்படுத்த லாம் என்றார்.
எருது விடும் விழாவில் காளை முட்டி காவலர் காயம்
கலவை, பிப்.28 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பென்னகர் மஹா சிவராத்திரி முன்னிட்டு எருதுகட்டு திருவிழா நடைபெற்றது. இளை ஞர்கள் மாட்டை அவிழ்த்து விட்ட போது, ஓடி சென்ற காளை, பாதுகாப்பு பணி யில் இருந்த காவலர் பிர பாகரனை குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்டு சக காவ லர்கள், காவல் ஆய்வாளர் வாகனத்தில் மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். இதனை தொடர்ந்து கலவை காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலை மையிலான காவல்துறை யினர் எருதுகட்டு திருவிழா நிறுத்துமாறு கூறியதாக தெரி கிறது. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நகர மன்றத் துணைத் தலைவரை அவமதித்த தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
சிதம்பரம், பிப்.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 33 வது வார்டுக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்துக்குமார் உள்ளார். இவர் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினராகவும் உள்ளார். பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து தந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின் அழைப்பிதழில் நகர்மன்ற துணைத்தலைவர் பெயரை போடாமல் பள்ளியின் தலைமை ஆசிரியை கண்ணகி அவரை புறக்கணித்து உள்ளார். இதனையறிந்த நகர மன்ற துணைத் தலைவர் விழாவை புறக்கணித்தார். தலைமை ஆசிரியர் கண்ணகி தொடர்ந்து எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டு துணைத்தலைவரை அவமதித்து வருகிறார், குறிப்பாக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தில் இந்த பள்ளியில் கண்ணகி ஏற்பாட்டில் தமிழக அரசின் செயல்திட்டங்கள் மற்றும் தந்தை பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த நிர்வாகி மணிவாசகத்தை அழைத்து தேசியக் கொடியை ஏற்ற வைத்தார். இந்த பகுதிக்கு வார்டு உறுப்பினர் என்ற முறையில் தினந்தோறும் பள்ளியை பார்வையிட்டு பள்ளிக்குத் தேவையான சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் முத்துக்குமரன் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளி ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழில் அவரது பெயர் விடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறி யுள்ளார்.
தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை, பிப்.28- பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் தேடப்பட்டு வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நாகார்ஜுனா சென்னையில் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் நாகர்ஜுனா ரெட்டி (40). இவர் மீது இந்தூர் மாநகர காவல்துறை குற்றப்பிரிவில் மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை யடுத்து இந்தூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் நாகர்ஜுனா ரெட்டியை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் பிடி கொடுக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் வெள்ளியன்று நாகார்ஜுனா கைது செய்யப்பட்டார்.