மதுராந்தகம் வட்டம், காவாதூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் சந்தானம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் இருபால் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகள் மற்றும் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா சண்முகம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சுகந்தி பாரதி உள்ளிட்ட பலர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.