headlines

img

ஜனநாயகத்திற்கு பேராபத்து!

ஜனநாயகத்திற்கு பேராபத்து!

இந்திய ஹேட் லேப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை, இந்திய ஜனநா யகத்தின் அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சு றுத்தல் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வெறுப்புப் பேச்சை பரப்புபவர்களில் முதல் ஐந்து இடங்களை உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தொடர்புடைய தலைவர்கள்தான் பிடித்துள்ளனர். 2014 முதல் 2023 வரை, மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக 75 சதவிகித வெறுப்புப் பிரச்சாரம் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2020 முதல், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் 210 சதவிகிதம் அதிகரித்துள்ளன. தலித் மற்றும் பழங்குடி சமூகங்களை குறிவைக்கும் சங்பரிவார் அமைப்புகளின் வெறுப்பு பிரச்சாரங்கள் 60 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன.

ஹிட்லரின் வெறுப்பு பேச்சுகள் ஜெர்மனியின் “ஆரியத் தூய்மை” என்ற கற்பனைக் கருத்தை முன்வைத்து பொது எதிரி கோட்பாட்டை உருவாக்கியது. அதே போல் மோடி  வகையறாக்கள்  “இந்துராஷ்டிரா” என்ற மதரீதி யான கோட்பாட்டை முன்வைத்து தலித் மற்றும் சிறுபான்மையினரை பொது எதிரிகளாக கட்டமைக்கின்றனர்.

 மதவெறுப்பு பேச்சுக்கள் தீவிரவாத அமைப்பு களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வழிவகுக்கின்றன. இது தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும்.  உலக வங்கியின் ஆய்வுகளின்படி, மத மற்றும் இன பதற்றங்கள் அதிகமுள்ள நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி சராசரியாக 1.5 சதவிகிதமாக குறையும் என சுட்டிக்காட்டுகிறது.வெறுப்பு  அரசியல் ஒரு நாட்டை வீழ்ச்சியை நோக்கியே இட்டுச்செல்லும் என்பதுதான் வரலாறு.  

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25-28 மதச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்துகிறது. ஆனாலும் இந்திய நீதிமன்றங்கள் இந்த வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன என்பது கவலைக்குரியது.  அதுமட்டுமல்ல வரலாற்றை திரித்து எழுதுதல், சட்டங்களை தவறாக பயன்படுத்துதல், ஊடகத்தை கைப்பற்றுதல், நீதித்துறையை முடக்குதல் உள்ளிட்ட பாசிசத்தின் முக்கிய படிநிலைகளையே மோடி அரசு முன்னெடுத்து வருகிறது.  

இந்தப் போக்கைத் தடுக்க, நீதித்துறை, ஊட கங்கள் மற்றும் சிவில் சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் ஜனநாயகம்  நமது அரசிய லமைப்பின் அடிப்படையாகும்.  இதனை பாது காப்பது  குடிமக்களின் கடமை.

நமது அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல, “ஜனநாயகம் வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு சமூக இணைவு முறை”. அந்த இணைவை  பாதுகாக்க; வெறுப்பு, பிளவு மற்றும் பாகுபாட்டின் அரசியலை நிராகரிக்க வேண்டியது அவசியம்.