கும்பமேளா எழுப்பும் கேள்விகள்
ஒன்றிய பாஜக கூட்டணி அரசு மற்றும் உ.பி. மாநில பாஜக அரசினால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட மகாகும்பமேளா முடிவடைந்திருக்கிறது. இது ஒரு மத நிகழ்வு என்கிற பெயரில் நடந்திருக்குமேயானால் அதில் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் ஒன்றிய அரசும், உ.பி. மாநில அரசும் இதை ஒரு அரசு விழா போலவே மாற்றின.
உண்மையில் இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா தானா என்பதே கேள்விக்குறி. ஏற்கெனவே 2013ஆம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியின் போது மகா கும்பமேளா நடத்தப்பட்டுவிட்டது; ஆண்டுக் கணக்குப்படி இது மகா கும்பமேளா அல்ல என்றும்; பாஜகவினர் அப்படி கிளப்பிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
திரிவேணி சங்கமம் என்று சொல்லப்படும் இடத்தில் கங்கையும், யமுனையும் சங்கமிப்ப தாகவும் மூன்றாவது நதியான சரஸ்வதி நிலத்தடி நீராக பூமிக்குள் ஓடுகிறது என்றும் புராணி கர்கள் புனைந்துரைக்கின்றனர். இந்திய நாகரி கத்தையே கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதி நாகரிகம் என்றெல்லாம் பாஜகவினர் பரப்பி வரு வதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியும்.
45 நாட்கள் நடைபெற்ற இந்த மகா கும்பமேளாவில் 68 கோடி பேர் புனிதநீராடியதாக ஒன்றிய அரசே செய்தி பரப்புகிறது. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு அங்கு சென்று வந்தார்களா என்பது ஆய்வுக்குரிய ஒன்று. ஆனால் அதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை இந்து விரோதி என்று முத்திரை குத்த ஆர்எஸ்எஸ் பரிவாரம் தயங்காது.
1954ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்றும் ஆனால் தற்போது பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை என்றும் ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஒன்றிய அரசு மற்றும் உ.பி. மாநில அரசின் கவனக்குறைவால் 30 பேர் உயிரி ழந்ததும் 60 பேர் படுகாயமடைந்ததும் தில்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்ததும் சாதாரண செய்தி போல காட்டப்படுகிறது.
போதுமான போக்குவரத்து செய்யப்படாத தால் ரயில் இன்ஜினிலேயே மக்கள் ஏறியதும், ஏசி ரயில் பெட்டியில் கண்ணாடிகள் உடைக்கப் பட்டதும் நடந்தது. விமானக்கட்டணம், ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
திரிவேணி சங்கம நீர் குடிதண்ணீர் அளவுக்கு தரமாக உள்ளது என்று உ.பி. மாநில முதல்வர் கூசாமல் கூறினார். ஆனால் அந்த நீரில் அதிக அளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமே கூறியது. ஆர்எஸ் எஸ் சார்பு சாமியார்கள் சபை, பிரயாக்ராஜ் நகரில் கூடி மநுநீதி நூலை இந்தியாவின் அரசியல் சட்ட மாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். மொத்தத் தில் எளிய மக்களின் நம்பிக்கையை தங்களது ஆபத்தான அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள பாஜகவினர் வழக்கம்போல முயன்றனர் என்ற செய்தியுடன்தான் கும்பமேளா முடிவுக்கு வந்திருக்கிறது.