headlines

img

நிராகரிப்பு நிச்சயம்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை காங்கிரஸ் (அணி) கூறுகிறது என்று கூறும் பாஜக என்ன செய்கிறது? ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத் தேர்தல் பொறுப்பா ளரான ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் அளிக்கும் வாக்குறுதிகள் எத்தகையவை?

இரட்டை எஞ்சின் ஆட்சி இரட்டிப்பு வேக வளர்ச்சி, 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை என்றும் பெண்களுக்கு அதிகாரம், நிலம், மகள்கள், வாழ்வாதாரம் பாதுகாப்பு ஆகியவற்றில் உறுதியாக உள்ளோம் என்றும் பிரதமர் மோடி பிரச் சாரத்திலும் எக்ஸ் தளத்திலும் கூறியிருக்கிறார்.

அமித்ஷாவோ, பொது சிவில் சட்டத்தி லிருந்து பழங்குடியினருக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் சட்டவிரோதமாகக் குடி யேறியவர்களை நாடு கடத்துவோம் என்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்றும் ஏழைகளுக்கு 21 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மாவோ, முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் ஊடுரு வல்காரர்களை வெளியேற்றுவோம் என்றும் வெறுப்பை கக்கியுள்ளார். அத்துடன் தற்போ தைய அரசின் தவறான கொள்கைகளால் பழங் குடியின சமூகத்தின் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளது; அதனால் சமூகத்தின் ஒவ்வொரு பிரி வினரும் பாஜகவில் இணைகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இவர்களது இந்த ஜம்பப் பேச்சுகளும் வெறுப்பு விதைப்புகளும் ஜார்க்கண்ட் மக்கள் மத்தியில் நிராகரிக்கப்படும் என்பது நிச்சயம். ஏனெனில் மாநில மக்களின் வளர்ச்சிக்காக பாஜக அரசு எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை. கனிம வளங்களை எடுப்பதற்காக உள்ளூர் மக்களை இடம் பெயரச் செய்த ஒன்றிய அரசு மாநிலத்துக்குரிய நிலக்கரி நிலுவைத் தொகையான ரூ.1.36 லட்சம் கோடியை இன்னும் வழங்கவில்லை என்பதே அவர்களது ஏமாற்று நடவடிக்கையை வெளிச்சம் போடும்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறுவது யார் என்பது அவர்களுக்கே தெரியும். மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கு வது நிறைவேற்ற முடியாததா? ரூ.2,100 வழங்கு வது முடியாததா? ஏற்கெனவே இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்கிய லட்சணம் தான் தெரியுமே. அதனால் நம்மை நம்ப மாட்டார் கள் என்பதாலேயே, 3 லட்சம் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படும் என்கிறார்கள், அப்போதாவது நம்புவார்கள் என்று.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற் காக ஜேஎம்எம் கட்சியிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு முதல்வர் ஹேமந்த் சோர னுக்கு வேட்புமனுவில் முன்மொழிந்தவரையே வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். இவர்களது வெறுப்பு அரசியலும் கீழறுப்புச் செயல்களுமே இவர்களின் தோல்வியை உறுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.