games

img

விளையாட்டு விளையாட்டு

ஓய்வு பெற்றார் தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின்  மூத்த வீரரும், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி யின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்டருமான தினேஷ் கார்த்திக், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து ஒய்வு  பெறுவதாக அறிவித்தார். 38 வயதாகும் தினேஷ் கார்த்திக் 2008 சீசனில் தில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி னார். அதன்பிறகு பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா  என 6 அணிகளுக்கு விக்கெட் கீப்பராக மிரட்டிய தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் பணியாற்றி னார். இதுவரை 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,842 ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திக், தனது கடைசி சீசனில் பெங்களூரு அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 326 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், பெங்களூரு அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் வெற்றிக்கு உதவிய நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு முடிவை கடைசி  லீக் ஆட்டத்தின் பொழுதே அறிவித்ததாக தகவல் வெளியா னது. எனினும் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்றதால், ஓய்வு முடிவை ஒத்திவைத்த நிலையில், எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வி கண்ட தால் ஓய்வை அறிவித்தார்.  17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மிக முக்கிய நட்சத்திர வீரராக ஜொலித்த தினேஷ் கார்த்திக்கிற்கு அகமதாபாத் மைதானத்தில் குவிந்து இருந்த பெங்களூரு, ராஜஸ்தான் வீரர்கள் என இருதரப்பினரும் எழுந்து நின்று சல்யூட் அடித்து ஓய்வுக்கு மரியாதையை செலுத்தினர். மேலும் கிரிக்கெட் ரசிகர்கள், நெட்டிசன்கள் தினேஷ் கார்த்திக்குக்கு மீம்ஸ் மூலம் வழியனுப்பி வைத்தனர்.

தினேஷ் கார்த்திக் பிரச்சனை இல்லாமல் அணியில் இருக்கக் கூடியவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், ஆடும் லெவனில் இடம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எப்பொழுதும் போல சகஜமாக அணிக் குழுவில் பணியாற்றுவார். இந்திய அணியில் இடம் கிடைக்காத நேரங்களில் வர்ணனையாளராக கலக்குவார். இதனால் இந்திய கிரிக்கெட் உலகில் தினேஷ் கார்த்திக் மிகவும் பிடித்தமான வீரராக உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு தீபிகா பல்லிக்கல் என்ற மனைவியும் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் தீபிகா பல்லிக்கல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளாக 
துரத்தும் துரதிர்ஷ்டம்
மீண்டும் கண்ணீர் கடலில் மிதக்கும் பெங்களூரு ரசிகர்கள்

ஐபிஎல் தொடரின் முக்கிய நட்சத்திர அணியான ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  ஒவ்வொரு சீசனிலும் மிக அருமை யான ஆட்டத்தை வெளிப்படுத்தினா லும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற முடியாமல் பரிதாப நிலையிலேயே நடப்பு சீசனிலும் இருந்து விடைபெற்றது.

17ஆவது சீசனில் பெங்களூரு அணி வழக்கம் போல வலுவான நிலை யில் களமிறங்கினாலும், தொடக்கத் தில் கடுமையாகத் திணறியது. 

எனினும் கடைசி 7 லீக் ஆட்டங் களில் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நடப்பு சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. போராட்டக் குணம் மிக அருமையாக இருந்ததால், பெங்களூரு அணி இந்த  முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு சொதப்பல்களால் பிளே ஆப் சுற்றின் “எலிமினேட்டர்” ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது பெங்களூரு அணி. 

தோல்வியால் பெங்களூரு அணி ரசிகர்கள் மைதானத்திலேயே கண் கலங்கினர். குறிப்பாக பெண் ரசிகர்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுது, மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் “எலிமினேட்டர்” ஆட்டம் நடைபெற்ற குஜராத் அக மதாபாத் மைதானம் கண்ணீர் கடலால் நனைந்தது.

அதிரடி மட்டும் போதாது வியூகம் வேண்டும்

ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பெயர் பெற்ற அணியான பெங்களூரு அணியின் ஆட்டத்தை காண கபடி விளை யாட்டை போன்று சுவாரஸ்யம் கலந்த  உற்சாகம் இருக்கும். இதற்கு காரணம் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என மூன்று  அடித்தளத்திலும் விராட் கோலியின் செயல்பாட்டை போன்றே ஒட்டுமொத்த அணியும் சுழலுவதால், பெங்களூரு அணி யின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆர்வமாக போட்டியை உற்று நோக்கும். கிரிக்கெட் விளையாட்டில் அதிரடி நல்லது தான் என்றாலும், அதற்கு மேலாக வியூகம் அமைப்பது மிக முக்கிய மானது ஆகும். பெங்களூரு அணி வியூகத்தில் சொதப்புவதன் காரணமாகவே பெங்களூரு அணி 17 சீசனிலும் வெறுங்கையோடு விடைபெறுகிறது.

“குவாலிபையர் 2” ஆட்டம்
ராஜஸ்தான் - ஹைதராபாத்
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு
நேரம் : இரவு 7:30 மணி
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்
அணி இறுதிக்கு முன்னேறும்

;