games

img

விளையாட்டு செய்திகள்

சூப்பர் 8இல் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணி வெளியேறியது

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடு களில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரின், 29ஆவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா - ஆப்கானிஸ் தான் (“குரூப் சி”) அணிகள் மோதின.  டிரினினாட் நகரில் உள்ள லாரா மைதா னத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்அணி பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்கள் முடிவில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

120 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி “சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது. “குரூப் சி” பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தகர்ந்த கனவு

9ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை தொடரில் “குரூப் சி” இடம்பெற்றுள்ள கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற அணியான நியூசிலாந்து அணி தனது முதல் 2 லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள்   அணிகளி டம் வீழ்ந்தது. நியூசிலாந்து அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி கண்டது கூட கிரிக்கெட் விளையாட்டில் வழக்க மான சம்பவமாக கருதப்படும் நிலையில், இளம் அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது கிரிக்கெட் விளை யாட்டில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த 2 தோல்வியால் 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கோப்பை வெல்லும் கனவும் தகர்ந்து விட்டது. நியூசிலாந்து அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ள  நிலையில், இந்த 2 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் வெறும் 4 புள்ளிகள் மட்டுமே கிடைக் கும். இதை வைத்து நியூசிலாந்து அணியால் எந்த பலனையும் அடைய முடியாது. காரணம் மேற்கு இந்தியத்தீவுகள், ஆப்கானிஸ்  தான் அணிகள் 6 புள்ளிகள் பெற்றிருப்பதால், நியூசிலா ந்து அணிக்கு உள்ள 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் எதுவும் ஆகப் போவது கிடையாது. அதனால் டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இன்றைய ஆட்டங்கள்

இந்தியா - அயர்லாந்து
இடம் : புளோரிடா, அமெரிக்கா
நேரம் : இரவு 8 மணி

இங்கிலாந்து - நமீபியா
இடம் : ஆன்டிகுவா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 10:30 மணி

துவங்கியது யூரோ கோப்பை கால்பந்து ஸ்பெயின் - குரோஷியா இன்று மோதல்

விளையாட்டு உலகின் “மினி கால்பந்து உலகக்கோப்பை” என அழைக்கப்படும் ஐரோப்பிய நாடு களுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து போட்டி வெள்ளி யன்று ஜெர்மனியில் தொடங்கியது. ஜூலை 16 வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், ஒரு பிரிவில் 4 அணிகள் என மொத்தம் 6 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஜூன் 26 வரை லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், தொடர்ந்து நாக் அவுட் சுற்றான “சுற்று- 16” ஜூன் 29 முதல் ஜூலை 2 வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6  தேதிகளில் நடைபெறவுள்ளது. அரை யிறுதி ஆட்டங்கள் ஜூலை 9, 10 தேதிகளி லும், இறுதி ஆட்டம் ஜூலை 14 அன்றும் நடைபெறும் நிலையில், யூரோ கோப்பை ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், மியூனிக், டார்ட்மண்ட், ஹம்பர்க், பிராங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன.

வெள்ளியன்று நடைபெற்ற துவக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் மோதிய நிலையில், இரண்டாம் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 

முதல் ஆட்டத்தில் ஹங்கேரி - சுவிட்சர்லாந்து (மாலை 6:30 மணி)  அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயின் - குரோஷியா (இரவு 9:30 மணி) அணிகளும், கடைசி ஆட்டத்தில் இத்தாலி - அல்பேனியா (நள்ளிரவு 12:30 மணி) அணிகளும் மோதுகின்றன.

;