games

img

விளையாட்டு செய்திகள்

சுனில் சேத்ரியின் இடத்தை நிரப்பும் அடுத்த இந்திய வீரர் யார்?
ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்திய கால்பந்து உலகம்

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்திய நாடு கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, தடகளம், மல்யுத்தம், பேட்மிண்டன், வில்வித்தை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில்  நட்சத்திர அந்தஸ்தில் மிரட்டி வருகிறது. இதில் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி முக்கிய நட்சத்திர அணியாக உள்ள நிலையில், டென்னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன் விளையாட்டிலும் சூப்பர்  பார்மில் சாம்பியன் அந்தஸ்து நாடாக உள்ளது. ஆனால் உல கின் முதன்மையான விளையாட்டான கால்பந்தில் இந்திய அணி சர்வதேச அளவில் சோபிக்காமல் உள்ளது. 

1990 வரை இந்திய கால்பந்து அணி இருப்பதே விளை யாட்டுப் பிரியர்களுக்கு தெரியாது. இப்படி சூழல் உள்ள நிலையில், 1998இல் கேரள வீரரான மணி விஜயன் இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி வளர்ச்சியின் படிக்கட்டுகளில் காலடி வைத்தது. 

1990 வரை இந்திய கால்பந்து அணி இருப்பதே விளை யாட்டுப் பிரியர்களுக்கு தெரியாது. இப்படி சூழல் உள்ள நிலையில், 1998இல் கேரள வீரரான மணி விஜயன் இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி வளர்ச்சியின் படிக்கட்டுகளில் காலடி வைத்தது. 

இதற்கு முக்கிய காரணம் சுனில் சேத்ரியின் கேப்டன்சி என்ற நிலையில், கடந்த வாரம் உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டத்துடன் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 19 ஆண்டு காலம் இந்திய கால்பந்து அணியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சுனில் சேத்ரியின் இடத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்கள்? அந்த வீரர் யார்? என்ற 2 முக்கியமான கேள்விகள் இந்திய கால்பந்து உலகில் கரைபுரண்டு வருகிறது. ஆனால் இந்த கேள்விக்கு ஆய்வு செய்து பதில்  கூற வேண்டிய அவசியமில்லை. 

சுனில் சேத்ரியைப் போன்று திறமையான, போதுமான அனுபவத்தை கொண்ட இரண்டு வீரர்கள் இந்திய கால்பந்து  அணியை வழிநடத்த தயாராக உள்ளனர். அவர்கள் பெயர் லாலியன்சுவாலா சாங்டே (26) மற்றும் விக்ரம் பிரதாப் சிங் (22) ஆவர். இருவரும் ஐஎஸ்எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்கள். லாலியன்சுவாலா சாங்டே, பிரதாப் சிங் வரும் காலங்களில் இந்திய அணியை திறம்பட வழிநடத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள்

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரின், 26ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் - நியூசி லாந்து (“குரூப் சி”) அணிகள் மோதின.  டிரினினாட் நகரில் உள்ள லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முத லில் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20  ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி “சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இன்றைய ஆட்டங்கள்

ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா
இடம் : டிரினினாட், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6 மணி

அமெரிக்கா - அயர்லாந்து
இடம் : புளோரிடா, அமெரிக்கா
நேரம் : இரவு 8 மணி

;