games

img

விளையாட்டு செய்திகள்

கதிகலங்க வைத்த நேபாளம்

ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  “சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

மேற்கு இந்தியத் தீவுகள், அமெ ரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனியன்று அதி காலை நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நேபா ளம் (“குரூப் டி”) அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முத லில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து, “குரூப் டி” பிரிவில் முதல் அணியாக “சூப்பர் 8” சுற்றுக்கு முன் னேறியது.

இன்றைய ஆட்டங்கள்

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்
 

ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து
இடம் : லூசியா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6 மணி

பாகிஸ்தான் - அயர்லாந்து
இடம் : புளோரிடா, அமெரிக்கா
நேரம் : இரவு 8 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்

“சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
1.இந்தியா (“குரூப் ஏ”)
2.அமெரிக்கா (“குரூப் ஏ”)
3.ஆஸ்திரேலியா (“குரூப் பி”)
4.ஆப்கானிஸ்தான் (“குரூப் சி”)
5.மேற்கு இந்தியத் தீவுகள்  (“குரூப் சி”)
6.தென் ஆப்பிரிக்கா  (“குரூப் டி”)
(மாலை 5 மணி நிலவரம்)

ஐரோப்பிய கால்பந்து கோப்பை 2024

இன்றைய ஆட்டங்கள்

விளையாட்டு உலகின் “மினி கால்பந்து உலகக்கோப்பை” என அழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து தொடரின் 17ஆவது
 சீசன் வெள்ளியன்று ஜெர்மனியில் தொடங்கியது.  ஜெர்மனியின் 10 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் 24 அணிகள் பங்கேற்கின்றன.

போலந்து - நெதர்லாந்து
நேரம் : காலை 6:00 மணி
இடம் : ஸ்டட்கார்ட், ஜெர்மனிஸ்லோவேனியா - டென்மார்க்
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : கெல்சென்கிர்சென், ஜெர்மனி

செர்பியா - இங்கிலாந்து
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
இடம் : கெல்சென்கிர்சென், ஜெர்மனி

சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)

;