டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார்.
இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியா , பாராலிம்பிக்கில் 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களை வென்றுள்ளது.