தங்கம் வென்ற நதீமும் என் மகன் போல தான் என்று நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை (ஆக.8) நள்ளிரவில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஒலிம்பிக்கில் தனிநபர் சாதனை படைத்த பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றி குறித்து நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறுகையில், “என் மகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதேபோல், தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும் என் மகன் போலத் தான். நதீமும் நன்றாக விளையாடினார். நீரஜுக்கும் நதீமுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நீரஜும், நதீமும் போட்டிக்களத்தில் ஒருவரையொருவர் மோதிக் கொண்டாலும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.