games

img

டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா!

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலக விளையாட்டு வரிசையில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். கடுமையான போட்டியிடையில் அவர் கடைசி சுற்றில் 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியன் வெபர், சிறப்பான ஆட்டத்தால் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.