games

img

விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு ‘தங்க மட்டை’ வழங்கி கேரள அரசு பாராட்டு

சமீபத்தில், நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 3ஆவது முறையாக கோப்பை வெல்ல முக்கிய பங்காற் றிய அதிரடி தொடக்க வீரரும், விக் கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி கேரள அரசாங்கம் திங்க ளன்று பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது. கேரள தலைநகர் திருவனந்த புரத்தில் உள்ள அதிநவீன கேரள கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடை பெற்ற இந்த பாராட்டு விழாவில், முத லமைச்சர் பினராயி விஜயன் சஞ்சு சாம்சனுக்கு தங்க மட்டை பரிசாக வழங்கினார். தொடர்ந்து பினராயி விஜயன் பேசுகையில்,“கேரளத்தில் விளையாட்டுத் துறை முன்னேறி வருவதற்கான அடையாளமாக அதிநவீன கேரள கிரிக்கெட் சங்க மைதானம் திகழ்கிறது. இந்த மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு பாராட்டு விழா நடத்துவதில் பெரு மை கொள்கிறேன். சஞ்சு சாம்சன் “கேரள கிரிக்கெட்டின் பிரகாசமான அடையாளம்” என அவர் பாராட்டி னார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள், சஞ்சு சாம்சனின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்ற னர்.

‘இந்தியாவின் பெருமை’ பாராட்டு விழாவிற்கு முன்னதாக, திங்களன்று திருவனந்தபுரம் கிளிப் ஹவுஸில் சஞ்சு சாம்சனை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கினார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், “இந்தியாவின் பெருமையும், கேரளத்தின் சொந்தப் புதல்வருமான சஞ்சு சாம்சனை  கிளிப் ஹவுஸில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவரிடம் கேரள மக்களின் அளவற்ற அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டேன். அவர் தனது சமீபத்திய சாதனைகளில் இருந்து ஊக்கம் பெற்று, தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன். சஞ்சு சாம்சனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு பதிலாக மெக்சிகோவிற்கு போட்டியை மாற்ற ஈரான் பேச்சுவார்த்தை

23ஆவது சீசன் உலகக் கோப்பை  கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறு கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் ஈரான் நாட்டின் லீக் போட்டிகள் (3)  அனைத்தும்   அமெரிக்காவில் நடை பெறுகிறது. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், உயர் தலைவர் காமேனி படுகொலை மற்றும் அமெரிக்காவில் பாதுகாப்புப் பிரச்சனையை காரணம் காட்டி, ஜூன் 11 அன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை புறக்கணிப்பதாக கடந்த வாரம் ஈரான் அறிவித்திருந்தது. ஈரான் நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அகமது துன்யாமலி இதுதொடர்பான  அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவில் நடை பெற வேண்டிய லீக் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து  சர்வதேச கால்பந்து சம்மேளனத்துடன் (பிபா) ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. மெக்சிகோவில் உள்ள ஈரான்  தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.  அமெரிக்காவிற்கு செல்ல மாட்டோம் மேலும், ஈரானிய கால்பந்து தலை வர் மெஹ்தி தாஜ் கூறுகையில், “அமெரிக்காவில் நடைபெறும் உல கக்கோப்பை தொடரில் பங்கேற்க எங்களுக்கு எந்த தயக்கம் இல்லை. ஆனால் ஈரான் அணியின் பாது காப்பைத் தம்மால் உறுதி செய்ய முடி யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள் ளார். ஒருநாட்டின் தலைவரே இவ்வாறு கூறியதால், நாங்கள் எப்படி அந்த நாட்டிற்கு செல்ல முடியும். நிச்சயமாக அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.