games

img

விளையாட்டு

மேற்கு ஆசிய போர் பதற்றம் ‘பைனலிசிமா’ கால்பந்து போட்டி ரத்து

மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வருவ தால், கத்தாரில் நடைபெறவிருந்த பிரசித்திப் பெற்ற ‘பைனலிசிமா (Fina lissima)’ கால்பந்து போட்டி ரத்து  செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  பைனலிசிமா என்பது ஐரோப்பிய கண்டத்தின் சாம்பியனுக்கும் (UEFA Euro Winner), தென் அமெரிக்க கண்டத்தின் சாம்பியனுக்கும் (CON MEBOL Copa América Winner) இடை யே நடக்கும் போட்டி ஆகும். எளிமை யாகச் சொன்னால், “சாம்பியன்களுக் கெல்லாம் சாம்பியன்” யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகும். இந்த போட்டி மார்ச் 27ஆம் தேதி  கத்தாரின் தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறவிருந்தது. தோஹாவிற்குப் பதிலாக வேறு இடங்களில் போட்டியை நடத்த ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் பல முயற்சிகளை எடுத்தது. ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.  மார்ச் 27இல் மாட்ரிட்டில் (ஸ்பெ யின் தலைநகர்) உள்ள சாண்டியாகோ பெர்னாபு மைதானத்தில் ‘பைனலி சிமா’ போட்டியை நடத்த ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் முன்மொழிந் தது. ஆனால் அர்ஜெண்டினா இதற்கு மறுப்பு தெரிவித்தது. இத்தாலியில் மார்ச் 27இல் விளையாட அர்ஜெண்டி னாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அர்ஜெண்டினா கால்பந்து சம்மே ளனம் மார்ச் 31இல் விளையாடலாம் எனக் கூறியது. இதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் ஒப்புக் கொள்ளவில்லை.  இதனால் போட்டியை இந்த  ஆண்டு இறுதியில் நடத்த அர்ஜெண்டி னா கேட்டுக் கொண்டது. ஆனால் ஸ்பெயின் அணி இதுதொடர்பாக எவ்வித விளக்கம் அளிக்காததால், ‘பைனலிசிமா’ கால்பந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  வருத்தம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மதிப்புமிக்க போட்டியை நடுநிலை யான இடத்தில் நடத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி யடைந்தது வருத்தமளிக்கிறது என தென் அமெரிக்க கால்பந்து கூட்ட மைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.  கடந்த 2022இல் நடைபெற்ற முதல் பைனலிசிமா போட்டியில் இத்தா லியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் பெண் கால்பந்து அணியை உடைக்கும் அமெரிக்காவின் முயற்சி தோல்வி

சமீபத்தில் ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி கள் ஆஸ்திரேலியாவில் நடை பெற்றது. போர் காரணமாக ஆசியக் கோப்பையில் விளையாடிய சில ஈரான்  வீராங்கனைகள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் ஆஸ்திரேலியா விலேயே தொடர்ந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய அர சாங்கம் பாதுகாப்பு அளித்து வரு கிறது.  இதனிடையே, ஈரான் பெண் கால்பந்து அணியின் கேப்டன் ஜஹ்ரா  கன்பாரி உட்பட 7 வீராங்கனைகள் அரசியல் தஞ்சம் அளிக்கக் கோரி ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியதாக செய்திகள் வெளியாகின. தேசிய கீதம் விவகாரம் தொடர்பாக இந்த முடிவை எடுத்துள்ளோம் என  வீராங்கனைகள் தரப்பில் செய்தி கள் வெளியாகின. மறுபக்கம் அமெ ரிக்காவின் மிரட்டல் மற்றும் தூண்டுதலால் 7 ஈரான் வீராங்கனை களும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியதாக ஈரான் ஊடகங்கள் சார்பில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அரசியல் தஞ்சம் அளிக்கக் கோரி ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிய ஈரான் பெண் கால்பந்து அணியின் கேப்டன் ஜஹ்ரா கன்பாரி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த அணியில் தஞ்சம் கோரும் முடிவை மாற்றிக்கொண்ட ஐந்தாவது நபர் ஜஹ்ரா கன்பாரி ஆவார். ஜஹ்ரா  கன்பாரி அறிவிப்பால், ஈரான் பெண்  கால்பந்து அணியை உடைக்கும் அமெரிக்காவின் முயற்சி தோல்வி யடைந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.