உலக செஸ் சாம்பியன்ஷிப் தமிழ்நாடு வீரர் குகேஷ் - சீன வீரர் லிரென் கடும் போராட்டம்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூர் தலை நகர், சிங்கப்பூர் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் உலக செஸ் சாம்பியனாக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (தமிழ்நாடு) - நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் ஆகிய இருவரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். 14 சுற்றுகளாக நடைபெறும் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யில் தற்போது வரை 5 சுற்றுகள் வரை நிறைவு பெற்றுள்ளன. 5 சுற்றுகளின் முடிவில் தலா 2.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் உள்ளனர். இன்னும் 9 சுற்றுகள் உள்ளது. இப்போட்டியில் 7.5 புள்ளிகள் பெறு பவர் சாம்பியன் பட்டம் பெற்றதாக அறி விக்கப்படுவார் என்பதால், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடும் போட்டி யுடன் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக ஜெய் ஷா பதவியேற்றார்
பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா (36) சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். கிரிக்கெட் விளையாட்டில் பின்புலம் இல்லாத ஜெய் ஷா பிரதமர் மோடியின் ஆதரவுடன் குஜராத் கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ செயலாளர், ஆசிய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிகளை வகித்து தற்போது ஐசிசி தலைவர் பொறுப்பில் அமர்ந்துள்ளார். ஐசிசி தலைவராக அமரும் 5ஆவது இந்தியர் ஜெய் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி 2024 ; இன்று விடுமுறை 3ஆம் கட்ட ஆட்டங்கள் புனேவில் நாளை தொடக்கம்
குறுகிய காலத்தில் பிரபலமடைந்த புரோ கபடி தொடரின் 11 ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு கட்ட ஆட்டங்கள் ஹைதராபாத் (தெலுங் கானா), நொய்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், 3ஆம் கட்ட ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செவ்வாய்க்கிழமை (டிச., 03) அன்று தொடங்குகிறது. புனேவில் நடைபெறுவது 3ஆம் கட்ட ஆட்டங்கள் மட்டுமின்றி புரோ கபடி 2024ஆவது சீசனின் கடைசி கட்ட ஆட்டங்கள் என்பதால், அதிரடி வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மேல்நோக்கி நகர்ந்து எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறும் நோக்கில் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எலிமினேட்டர் லீக் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அதே போல மூன்றாவது, நான் காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடிக்கும் அணிகள் எலி மினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று விடுமுறை அணி வீரர்கள், நடுவர்கள், போட்டி அமைப்புக்குழு போன்றவை இடம் பெயர்தல் காரணமாக (நொய்டா வில் இருந்து புனே நோக்கி) புரோ கபடி தொடருக்கு திங்கள்கிழமை விடு முறை நாளாகும். செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 3ஆம் கட்ட ஆட்டங்கள் நடைபெறும் என்பதுகுறிப்பிடத்தக்கது.