games

img

விளையாட்டு...

பிசிசிஐ புதிய செயலாளர் மீண்டும் குஜராத்தைச் சேர்ந்தவர்? பதவிக்காக பணம் பேரமும் நடக்கிறதாம்

பிசிசிஐ செயலாளராக இருந்த  ஒன்றிய உள்துறை அமைச்சர் மகன் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக பொறுப்பேற்றுள் ளார். இதன் காரணமாக பிசிசிஐ செய லாளர் பதவி தற்போது காலியாக உள்ளது.  கடந்த மாதம் பிசிசிஐ புதிய செய லாளராக மறைந்த முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி பொறுப்பேற்பார் என செய்திகள் வெளியாகியுள்ளன.  ஆனால் குஜராத்தைச் சேர்ந்தவ ரும், பாஜகவிற்கு மிக நெருக்கமான அனில் படேல் பிசிசிஐ-யின் அடுத்த செயலாளராக பொறுப்பேற்க உள்ள தாக தற்போது செய்திகள் வெளியாகி யுள்ளன. எனினும் பிசிசிஐ புதிய செய லாளர் பந்தயத்தில் ரோகன் ஜெட்லி, பிசிசிஐ-யின் தற்போதைய இணைச் செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகி யோரும் உள்ளதாக கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன. பதவிக்கு பண பேரம்? “பிசிசிஐ புதிய செயலாளர் தேர்வில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அனைவரும் (பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் மாநில பிரிவுகள்) இந்த விஷயத்தில் அமைதி யாக உள்ளனர். அதுவரை இணைச் செயலாளர் (சைகியா) தற்காலிகமாக இருப்பார். பிசிசிஐ புதிய செயலாளர் என்பது ஒரே நாளில் தீர்க்கப்பட வேண்டிய விஷயம் தான். அதில் பெரி யளவில் சிக்கல்கள் இல்லை. ஆனால் பிசிசிஐ  எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சிறிது புரிதல் இருக்க வேண்டும். பிசிசிஐ புதிய செயலாளர் பதவிக்கு பண பேரமும் நடக்கிறது  போன்று தகவலும் வெளியாகி யுள்ளது” என்று பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்டார்க்கிடம் வம்பு இழுப்பது நல்லதல்ல

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை அன்று பக லிரவு ஆட்டமாக (பிங்க் பந்து) நடைபெறுகிறது.  பெர்த் நகரில் நடை பெற்ற முதல் டெஸ்ட் போட்டி யில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் பொழுது இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிடம், “உங்கள் பந்து மிக மெதுவாக வரு கிறது” எனக் கூறினார். அப்போது போட்டியின் தன்மை இரு அணிக்கும் சவாலாக இருந்ததால், ஜெய்ஸ்வாலின் கருத்தை ஸ்டார்க் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு தனது வேலையை கவனித்தார்.  ஆனால் வெள்ளிக் கிழமை நடைபெறவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க்கிடம் வம்பு இழுப்பது நல்லதல்ல.  காரணம் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி கூடுதல் பயிற்சி யுடன் மிக மூர்க்கமாக விளை யாடும் என எதிர்பார்க்கப்படு கிறது.  இத்தகைய சூழலில்  ஸ்டார்க்கிடம் இந்திய  வீரர்கள் மீண்டும் வம்பு இழு த்தால் உண்மையாகவே 160 கிமீ வேகத்தில் பந்து வீச ஆரம்பித்து விடுவார். அதனால் இந்திய அணி வீரர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  ஸ்டார்க் கடந்த 2015இல்  நியூஸிலாந்து அணிக்கு எதி ராக டெஸ்ட் போட்டியின் பொழுது 160.4 கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டி னார். நிதானமாக விளையாடி னால் ஸ்டார்க் பெரும்பாலும் 150 கிமீ வேகத்தில் மட்டுமே பந்துவீசுவார். கோபம் மூட்டினால் அன்று சரவெடி தான் என்பது குறிப்பிடத் தக்கது.

புரோ கபடி 2024

இரண்டு ஆட்டங்களும்: பலேவாடி காம்ளெக்ஸ், புனே, மகாராஷ்டிரா

சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

தில்லி - உ.பி., யோதாஸ்
நேரம் : இரவு 8 மணி

ஜெய்ப்பூர்  - மும்பை
நேரம் : இரவு 9 மணி