games

img

விளையாட்டு...

கினியா நாட்டில் கொடூரம்
கால்பந்து ரசிகர்கள் மோதல் ; 56 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா குடியரசின் முக்கிய நகரான நெஜரேகோரே நகரில் நாட்டின் இராணுவத் தலைவரும், ஜனா திபதியுமான மமாதியின் பெயரில் கிளப் கால்பந்து போட்டி ஒன்றுநடைபெற்றது. 

போட்டியின் போது நடுவரின் தவ றான முடிவால் இரு கிளப் அணியின் ரசி கர்களும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். கையில் கிடைத்ததை கொண்டு ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

இந்த கோரச் சம்பவத்தில் 56 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 10க்கும் மேற் பட்டோர் குழந்தைகள் ஆவர். 1000க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பலர் படு காயத்துடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டும் என நெஜரேகோரே நகர காவல்துறை செய்திவெளியிட்டுள்ளது.

காவல்நிலையத்திற்கும் தீ வைப்பு 

வன்முறை சம்பவம் நடைபெற்ற மைதானம் நெஜரேகோரே நகர  காவல்நிலையத்திற்கு அருகில் உள்ளது. இரு அணி ரசிகர்கள் மோத லின் போது காவல்நிலையத்திற்கும் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்ப வத்தில் சில போலீசாரும் காயமடைந் ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

அரசியல் வன்முறை

நெஜரேகோரேவில் நடைபெற்ற வன் முறை அரசியல் சார்ந்த வன்முறை என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2021இல் ராணுவ தளபதியாக இருந்த மமாதி ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கினியா நாட்டின் ஜனாதிபதி ஆனார். அடுத்த ஆண்டு (2025) கினியா நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள் ளும் முயற்சியின் ஒரு பகுதியாக நாட்டின் பல இடங்களில் ஜனாதிபதி மமாதி தனது பெயரில் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறார். மமாதி பெயரில் நடைபெற்ற கால்பந்து போட்டி யின் பொழுதே நெஜரேகோரே நகரில் வன்முறை வெடித்துள்ளது. இது போட்டியின் பொழுது ஏற்பட்ட வன் முறை அல்ல, அரசியல் சார்ந்த வன் முறை என செய்திகள் வெளியாகியுள்ளன.

கும்கிகளும்... குத்துச்சண்டை வீரர்களும்...

கும்கி யானைகளுக்கும் குத்துச் சண்டை வீரர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பெயர்களும் சம்மந்தமில்லாத துறைகளாக இருந்தாலும் இந்த தகவல் சற்று சுவாரஸ்யமானது.  காட்டு யானைகளை பிடித்து தீவிர பயிற்சிக்கு பின்னர் பழக்கப்படுத்தும் யானைகள், கும்கி யானைகள் ஆகும். கும்கி வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு ஊழியர் போன்றது ஆகும். காட்டு யானை கும்கியாக மாறிய பின் தனக்கு பயிற்சி அளித்த மற்றும் தன்னுடன் இருக்கும் பாகன் (மாவூத்) சொல்வதை மட்டும் கேட்கும். அதே போல பாகன் மற்றும் அவரின் உதவியாளரை தவிர வேறு யாரையும் அருகில் நெருங்க விடாது.

மீறி நெருங்கினால் தற்காப்பிற்காக தாக்குதல் நடத்தி கொன்று விடும் (திருச்செந்தூர் சம்பவம் போன்று).  இதே கும்கி யானையைப் போல தான் குத்துச்சண்டை வீரர்களும் இருப் பார்கள். தனக்கு பயிற்சி அளிக்கும் தலைமை பயிற்சியாளர் சொல்வதை மட்டுமே குத்துச்சண்டை வீரர்கள் எளி தில் உள்வாங்குவார்கள். வேறு யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். குறிப்பாக போட்டியின் பொது பயிற்சியாளர்கள் குழுவில் பலர் ஆலோசனை தொடர்பாக கூச்சலிட்டா லும், தலைமை பயிற்சியாளர் சொல்வ தை மட்டுமே குத்துச்சண்டை வீரர் கேட் பார்.

அதே போல போட்டியின்பொழுது, “எதிரணி வீரரை தாக்க வேண்டாம்; போதும் நிறுத்திக்கொள்” என தலைமை பயிற்சியாளர் சொன்னால் மட்டுமே தாக்குதல் வேலையை குத்துச்சண்டை வீரர்கள் நிறுத்துவார்கள்.  போட்டி முடிந்த பின்பு இரு வீரர்களின் அணிகளுக்குள் ஏற்படும் கைகலப்பின் பொழுது தலைமை பயிற்சியாளர் சொன்னால் அல்லது பிடித்து இழுத்தால் மட்டுமே குத்துச் சண்டை வீரர்கள் சமாதானம் ஆவார்கள் தலைமை பயிற்சியாளர் தவிர வேறு யாராவது சண்டையை தடுப்பதாக கூறி பிடித்து இழுத்தால் குத்துச்சண்டை வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்கள். அது சொந்த அணியினராக இருந்தாலும் கூட தொட விடமாட்டார்கள்.  இதனால் தான் கும்கி யானைகளும் குத்துச்சண்டை வீரர் களும் சம ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.