தொடர் தொடங்கிய பின்பு பயிற்சி போட்டியா?
வலுக்கும் கண்டனம்
5 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
5 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது ஆட்டம் மட்டும் பகலிரவு ஆட்டமாக நடைபெறு கிறது. நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டி போன்று மற்ற ஆட்டங்கள் பகலில் மட்டும் நடைபெற உள்ளது. பொதுவாக கிரிக்கெட் விளை யாட்டில் பயிற்சி ஆட்டங்கள் தொடர் தொடங்கும் முன்னர் நடைபெறும். தொடர் தொடங்கிய பின்னர் நடைபெறாது.
ஆனால் பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்கி ஒரு ஆட்டம் நடைபெற்றப் பின், பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக என்று கூறி பயிற்சி ஆட்டம் நடத்தப் பட்டுள்ளது. தொடர் தொடங்கிய பின்னர் பயிற்சி ஆட்டம் நடத்தப்படு வது காயத்திற்கு வழிவகுக்கும் என்பது கிரிக்கெட் உலகிற்கு நன்கு தெரிந்தும், பயிற்சி ஆட்டம் நடத்தப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டங்களில் இது வெறும் சாதாரண போட்டி என வீரர்கள் அசால்ட்டாக விளையாடுவார்கள். இத னால் காயங்கள் ஏற்படும். இதனை அறியாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள வித்தியாசமான முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் தலை ஆட்டி பொம்மை யாக பயிற்சி ஆட்டத்தில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வீரர்களுக்கு காயம்
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், சப்மன் கில் ஆகியோ ருக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்ட தாகவும், அவர்கள் போட்டியின் பொழுது முன்கூட்டியே பெவிலியன் சென்றதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தொடர் தொடங்கிய பின் பயிற்சி ஆட்டம் வேண்டாத வேலை என கிரிக்கெட் வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணி களுக்கு எதிராக டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக் காக நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஆஸ்தி ரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இந்திய அணி பிங்க் பந்தில் நடத்தப் பட்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி யது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
புரோ கபடி 2024
இன்றைய ஆட்டங்கள்
இரண்டு ஆட்டங்களும்: பலேவாடி காம்ளெக்ஸ், புனே, மகாராஷ்டிரா
பெங்களூரு - குஜராத்
நேரம் : இரவு 8 மணி
மும்பை - புனே
நேரம் : இரவு 9 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் ஒடிடி
கிரிக்கெட் பற்றி தெரியாதவர் ஐசிசி தலைவரா?
சமூகவலைத்தளங்களில் வறுபடும் அமித் ஷா மகன் ஜெய் ஷா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா (36) சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
ஜெய் ஷாவிற்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது என்பது நாடறிந்த விஷயம். எனினும் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவரும், தனது தந்தை யுமான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பெயரை பயன்படுத்தி ஜெய் ஷா (36) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் விளை யாட்டில் பின்புலம் இல்லாத ஜெய் ஷா ஐசிசி தலைவராக பொறுப்பேற்பது நியாய மானதா? பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவ ராக இருந்த பொழுது இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குள் பல்வேறு பிரச்சனை தூண்டிவிட்ட ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் அரங்கில் என்னென்ன சித்து விளையாட்டுகளை அரங்கேற்றப் போகிறாரோ? என நெட்டி சன்கள் ஜெய் ஷாவுக்கு எதிராக கருத்து மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும்,”சூரத் வைர வியாபாரி மனநிலையில் பிசிசிஐ அமைப்பிற்குள் நன்றாக கல்லா கட்டிய ஜெய் ஷா, ஐசிசி தலைவராக பணமழையில் நனை வர் என நெட்டிசன்கள் கிண்டலும் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் அமித் ஷா மகன் ஜெய் ஷா எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.